6.30.2023

துளி. 377


பூங்காவில் இருக்கும் சறுக்கு பலகையில் ஒரு குட்டிப் பையன் எதிர் திசையில்
ஏற முயற்சிக்கிறான்
முடியாமல்
சறுக்கி விழுகிறான்
மறுபடியும் முயற்சி
மறுபடியும் வீழ்ச்சி
இருந்தும் கைவிடவில்லை
அவன் முயற்சிப்பதை
வியந்து பார்க்கும்
இவனுக்கு
அந்த சிறுவனே
தானாகிவிட்டதாக தோன்றுகிறது.

21.05.2023.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...