முன்னொரு காலத்தில் எனக்கும் பக்தி இருந்தது, பிறகு நூலகம் சென்று வாசிக்க தொடங்கியபின் நாத்திகம், பகுத்தறிவு போன்ற சொற்களால் ஈர்க்கப்பட்டு அவ்வப்போது அந்த கருத்து சார்ந்து புத்தகங்கள் வாசிப்பது இயல்பாகிவிட்டது. கடவுள் நம்பிக்கை காணாமல் போய் கடவுளின் தோற்றம் பற்றிய கருத்துகளை அறியவேண்டும் என்ற ஆசை வளரதொடங்கிவிட்டது.
அப்படி அண்மையில் வாசித்த புத்தகம் அஸ்வகோஷின் " கடவுள் என்பது என்ன...? "
அப்படி அண்மையில் வாசித்த புத்தகம் அஸ்வகோஷின் " கடவுள் என்பது என்ன...? "
இது நாத்திக பிரச்சார நூல் அல்ல. ஆனால் பகுத்தறிவுவாதம் பேசுபவர்களுக்கு இது பக்கபலமாக இருக்கும். எல்லாவற்றையும் அறிவியல் கண்கொண்டு பார்க்க சொல்கிறது இந்த புத்தகம்.
இந்த பூமி எப்படி தோன்றியது, தாவரங்கள், விலங்கினங்கள் எப்படி தோன்றின, மனித இனம் எப்படி உருவானாது, கடவுள் என்ற கருத்து எப்போதும் உருவாகியிருக்கும், அது எதனால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும், மதம் தோன்றிய வரலாறு என எல்லாவற்றையும் விஞ்ஞானம் எப்படி நிறுவுகிறது என்று இந்த புத்தகம் மிக எளிய முறையில் விளக்ககுகிறது.
பொருள் முதலில் தோன்றியதா, கருத்து முதலில் தோன்றியதா என்ற விவாதம் இந்த நூலின் சிறப்பம்சம். இரண்டையும் தர்க்கபூர்வமான முறையில் நிறுவியுள்ளார்.
பொருள் முதல்வாதி என்பவன் யார், கருத்து முதல்வாதி என்பவன் யார், சமூகத்தின் வளர்ச்சியில் அல்லது மானுட வளர்ச்சியில் ஆக்கபூர்வமான மாற்றம் இந்த இருவரில் யாரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதையெல்லாம் மிகவும் சிறந்த முறையில் இந்நூல் விளக்குகிறது.
மிகவும் சிக்கலான அறிவியல் கருத்துகளை எளியமுறையில் விளக்கமாக அஸ்வகோஷ் எழுதியுள்ளார்.
அறிவியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து தேவைப்படுகிறது. மதத்தின் பேரால் மக்களை பிரிக்கும்போது அவர்களை ஒன்று சேர்க்க அறிவியல் சார்ந்த கருத்துக்களே மிகவும் உதவியாக இருக்கும்.
இந்நூலை அலைகள் பதிப்பகம் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. 28.05.2019