12.15.2017

துளி . 127

இரகசியங்கள்

மூன்றாவது தலைமுறை 
அலைபேசிலிருந்து

நான்காவது தலைமுறை 
அலைக்கற்றையில்

அனுப்பி வைக்கிறேன்
இரகசிய ஆசைகளை

ஏற்றுக்கொள்வாரென
எதிர்பார்த்தவர்

தொடர்பு எல்லைக்கு
வெளியே

கோளாறு
தொழில்நுட்பதினாலா

இல்லை இது கோளாறு
என்ற மதிநுட்பதினாலா

காற்றின் திசையெங்கும் 
காத்துகிடக்கின்றன

எண்ணிலடங்கா
இரகசிய ஆசைகள்...

                                                              05.12.2017

துளி . 126

காத்திருக்கிறோம்
கடலின் 
கருணைக்காக.....

                                    04.12.2017

துளி . 125

உயிரற்ற 
சொற்களை
காட்டிலும் 
மகத்தானது 
மெளனம்.

                            02.12.2017.

11.30.2017

துளி . 124

பேரன்பை கொடுத்தால்
பதிலாக கிடைக்கிறது
பெரும் துன்பம்.

                               30.11.2017.


துளி . 123

வேறு எந்த 
கெட்ட பழக்கமும் 
கிடையாது  அவனுக்கு
அணு அணுவாய் 
ரசித்து 
ஒரு உயிரை
துடித்துடிக்க
கொல்வதை தவிர...


                                          27.11.2017.

துளி . 122

ஒரு 
மரணம் 
அடையாளம் 
காட்டியது 
பல 
பிணங்களை....


                                 27.11.2017.

துளி . 121

அலைப்பேசி

அனைத்தையும்
அறிந்துகொள்ளலாம்
நாட்டு நடப்பை
நட்புகளின் நடிப்பை
காதலின் துடித்துடிப்பை
காமத்தின் துயரத்தை
நம்முள்ளிருக்கும்
சாத்தானை
நம்முள்ளிருக்கும்
கடவுளை
களித்திருப்போம்
களவாடப்படும்
காலத்தையறியாது...

                                     21.11.2017.

11.20.2017

திரை . 01

                                                      அறம் - அற்புதம்.

சமூக வலைத்தளங்களில் மிக பாராட்டுதலைப் பெற்ற பல படங்களை ஆர்வமாக பார்க்க போய் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அறம் அப்படி இல்லை. மிக அற்புதமான படம்.

மதிவதினியின் துறைசார் விசாரணையில் தொடங்கும்
அறம் படம் கதைக்கு தேவையான வடிவ நேர்த்தியுடன் இருக்கிறது. கதைக்களம், கதைக்கு தேவையான சரியான நடிகர்கள், காட்சிக்கு தேவையான அளவுக்கு சிறப்பான வசனங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றன.

அறம் பேசும் அரசியல் மிகவும் தெளிவாக இருக்கிறது. அரசின் அலட்சியம், அதிகார அமைப்பின் சிக்கல்கள் , இந்த அரசு யாருக்கா செயல்படுகிறது என்பதையெல்லாம் சரியாக பதிவு செய்துள்ளது.

காட்டூர் மக்களின் துயரம், மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தும் உணர்வு பூர்வமாக இப்படத்தில் பதிவாகியுள்ளது.

மகனின் எதிர்காலம் குறித்து புலேந்திரனும் அவன் மனைவியும் பேசிக்கொள்வதை மகன் கேட்டுக்கொண்ருக்கும் போதும், இடைவேளை காட்சியின் போதும், இறுதிக்காட்சியி்ன் போதும் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

இப்படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் கதைக்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.

என் மானசீக குருநாதர்கள் பெயர் பட்டியலில் இயக்குனர் கோபி நயினார் பெயரையும் சேர்த்து கொள்கிறேன்.

துளி . 120

                   அம்மா

உத்வேகம் பெறுகிறேன்
உன் சொற்களில்
பரிசுத்தமாகி போகிறேன்
உன் பார்வையில்
உறங்க செல்லும் முன்பும்
உறங்கி விழித்தப் பின்பும்
நினைத்து கொள்கிறேன்
உன் பேரன்பை.

                                                 16.11.2017.

துளி . 119

                        துரோகம்

எல்லா
தீமைகளிலிருந்தும்
உன்னை காப்பேன் 
என்றவன் தான்
அவளை தீயிட்டு
கொளுத்தினான்
விலகி செல்கிறேன்
உன்னை என்று
அவள் சொன்னதும்...

                                         15.11.2017.

துளி . 118

இன்பத்தின் 
உறைவிடம் 
குழந்தைகள்....

                          14.11.2017.

11.11.2017

துளி . 117

கனமழையிலும் 
கறையாதிருக்கிறது 
உன் நினைவுகள்...

                                   05.11.2017.

துளி . 116

சட்டென பொழியும்
மழையின் சத்தம் 
நினைவூட்டுகிறது 
சட்டென நீயிட்ட 
முத்தத்தின் சத்தத்தை....

                                                 01.11.2017.

11.01.2017

துளி . 115

சூடான தேநீர்
சுகமான உன்
நினைவுகள்
போதுமெனக்கு
இம்மழை நாளில்...

                             30.10.2017.

துளி . 114

நண்பா
வீழ்ச்சி 
இயல்பென்றால் 
எழுச்சியும் 
இயல்புதானே...

                                27.10.2017.

துளி . 113

தேவதையின் 
விலாசம் தேடி 
வந்தவனிடம் 
சொல்கிறான் 
தேவையா வதை...

                                26.10.2017.

துளி . 112

நான்
தீவிர வாசகன்தான் 
என்ன செய்ய
முடிவிலா பக்கங்கள்
கொண்ட மாயப்புத்தகமாய் 
நீ....


                                         25.10.2017.

துளி . 111

எரிந்து 
கருகியது 
மனிதம் 
காசு காசு 
என்றவனால் ...
                        24.10.2017.

10.21.2017

துளி . 110

திசைகள் தோரும் 
தேடி அலைகிறேன் 
பேரன்பை பொழியும் 
தேவதையை ...

                             21.10.2017.

துளி . 109

தேவதைகள் 
அண்ணா என்றழைப்பது 
அவன் மீதுள்ள பயத்தாலா 
அல்லது 
தன்மீதான பயத்தாலா...

                                       20.10.2017.

10.09.2017

துளி . 108

அனைத்து
துயரங்களையும் பகிர்ந்து
கொண்டாய் என்னிடம்
முதல் சந்திப்பில்
அந்தரங்கத்தினுள்
பிரவேசிக்க முயன்ற
எனைவிலகி சென்றாய்
கடைசி சந்திப்பில்

                                       05.10.2017.

9.30.2017

துளி .107

வீழ்ந்து துடிக்கிறது
என் இதயம்
வெட்டி செல்கிறது
உன் பார்வை

                                   30.09.2017.

துளி .106

உன்னை விலக்கவும் 
முடியவில்லை
உன்னை நெருங்கவும்
இயலவில்லை

                                   19.09.2017.

துளி .105

எமது இலக்கு
எமது காலடி
தூரத்தில் இல்லை
நெருக்கடிகளையும் தாண்டி
நெடும்தூரம் பயணிக்க
எமக்கு தெரியும்

                                     11.09.2017

பதிவு .05

ஈழத்தில் சிங்கள பவுத்த மத இராணுவத்தினால் நடந்தப்பட்ட தமிழ் இன அழித்தொழிப்புக்கு பிறகான காலத்தில் ஈழ யுத்தகளத்தை பின்புலமாக கொண்டு பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அந்தவரிசையில் சென்ற ஆண்டு வெளிவந்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலும் ஈழ யுத்தத்தைப் பற்றிய படைப்பாக உள்ளது.
இந்த நாவல் இந்திய அமைதிப்படை இலங்கை யில் நுழைந்த காலத்துக்கு சற்றுமுன் தொடங்கி அமைதிப்படை வெளியேறும் காலம் வரையிலான ஈழ தமிழர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளது.
ஒரு காதல் கதை போல் மேலுக்கு தெரிந்தாலும் யுத்தம் மனித வாழ்வை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்குகிறது என்பதை வார்த்தை சிக்கனத்தோடும், வலிமையாக உணரும்வண்ணமும் நுண்மையாக தமிழ்நதி எழுதியுள்ளார்.
அகிம்சையை உலகுக்கு போதித்தவரை தேசதந்தையாக போற்றும் இராணுவம், அமைதியை நிலைநாட்ட சென்றதாக சொல்லப்பட்ட இராணுவம் ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் பற்றியும் இந்நாவல் பேசுகிறது.
போராளிகளின் வளர்ச்சி, சகோதர இயக்கங்களின் சண்டைகள், சாதிய அபிமானங்கள் என அனைத்தையும் இந்நாவல் விவாதிக்கிறது.
இந்நாவலை நற்றிணை பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

                                                                                                               29.09.2017.

9.04.2017

பதிவு . 04

"இரவல் காதலி" நாவலின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த நாவலை வாசிக்க தொடங்கினேன். செல்லமுத்து குப்புசாமிக்கு இது முதல் நாவல் என புத்தகத்தில் உள்ள குறிப்பு சொல்கிறது, நம்பவே  முடியவில்லை.
மென்பொருள் துறை சார்ந்தவர்களின் வாழ்வை பற்றி பேசுகிறது இந்த நாவல். அசோக் பெரியசாமி வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதனூடாக நவீன வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்களையும், ஏமாற்றங்களையும், ஆண் பெண் பாலியல் உறவு சிக்கல்களையும் மிக சிறப்பாக இந்நாவல் பதிவு செய்துள்ளது . இந்த நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிவு . 03

"இனி வரப்போகும் எதிர்கால சந்ததியினர், இவரின் வாழ்க்கையை படித்து விட்டு, இப்படி ஒரு மனிதர், எலும்பும், சதையும், ரத்தமுமாக உண்மையிலேயே மனிதனாக வாழ்ந்திருந்தாரா" என்று ஆச்சரியப் படுவார்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இப்படி சொன்னாராம்.
கார்ல் மார்க்ஸ்-ன் 200-வது பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டபோது காந்தி பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. உழைக்கும் மக்களுக்கா சிந்தித்த ஒரு மனிதர் அடைந்த துயரங்கள் கேட்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
இப்படி ஒரு மனிதர் தன் வாழ்நாள் முழுக்கவும் உலக மானுட மேன்மைக்காவே சிந்தித்துக் கொண்டேயிருந்தார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

துளி.104

எல்லா உண்மைகளையும்
அடையாளம் இல்லாமல்
அழிக்கும் அவர்கள்
மக்களைப் பார்த்து 
சொல்கின்றனர் வீட்டுக்கு 
வெளியே வரும்போது
உண்மையோடு வா...


                                                01.09.2017.

துளி.103

உயிர்கொலை
செய்யேன் என 
உறுதி பூண்டவர்கள் 
மனித இரத்தம் 
குடிக்கிறார்கள்....

                                      31.08.2017.

துளி.102

தொலைந்து 
போகிறேன்
உனது பேரன்பில்....

                               28.08.2017.

8.26.2017

துளி.101

மறுபடியும் 
நிரூபித்துவிட்டார்கள் 
கோமாளிகளென...

                                     21.08.2017.

துளி.100

விலகி செல்
என்கிறாய்
நாம் 
விலகாமல் விலங்கிடும்
சொல்லல்வோ அது....

                                     18.08.2017.

துளி.99

துயரில் மூழ்குகிறான் 
பிறர் துயர்துடைக்க
முயன்றவன்.

                                        17.08.2017.

8.16.2017

துளி.98

மிகசரியாக செய்கிறேன்
செய்யக் கூடாதென
தீர்மானித்ததை யெல்லாம்...

                                                15.08.2017.

துளி.97

பூத்து குலுங்கும்
மாம்பூக்களின்
வாசனை
சூரியன் முகம் 
பார்த்து நடந்த
பள்ளி நாட்களை
மூங்கில் வாசம்வீசும்
நதிக்கரையில்
திரிந்த பொழுதுகளை
இலுப்பை பூவாசத்தில்
நாம் தீட்டிய
எதிர்கால திட்டங்களை
எல்லா தருணங்களிலும்
ஒன்றாகவே பயணிக்க
நாமிட்ட சத்தியங்களை
கனியாவதில்லை
எல்லா பூக்களும்
எல்லா சத்தியங்களும்.....

                                              11.08.2017.

துளி.96

என்னுள் 
பெருவெடிப்பு சத்தம்
உன் மெளனத்தால்....

                                       10.08.2017.

துளி.95

கற்றுக்கொடுப்பதே 
வாழ்க்கை பலருக்கு
கற்றுக்கொள்வதே
வாழ்க்கை சிலருக்கு

                                       29.07.2017.

துளி.94

காரிருளை 
ஒளியாக்குகிறது
வளர்மதி...

                                  19.07.2017

துளி.93

தேவதையின் 
தீண்டலை 
எதிர்பார்த்த 
எல்லோரையும் 
தீண்டிச் செல்கிறது
நச்சரவம்...


                             17.07.2017.

7.17.2017

பதிவு . 02

நவீன அரசுகள் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. விவசாயம் பொய்த்து போனால் விவசாயி மட்டும் வீழ்வதில்லை, அவன் வளர்க்கும் ஆடு மாடுகள் இல்லாமல் போகிறது. மாடு இல்லாமல் போனால் மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. மாட்டு தரகர் வரண் பார்க்கும் தரகரா மாறுகிறார். மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் தாத்தாவை பத்தி கவலைப்படும் ஒரு படைப்பை ஜி.காரல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இவரது ‘’கட்டுத்தரை’’ எனும் சிறுகதை இதுபற்றிய சிறப்பான பதிவாகும். எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள ‘’ வருவதற்கு முன்பிருந்த வெயில்’’ சிறுகதை தொகுதியில் இந்த கதை உள்ளது. இதில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எளிய மொழியில் மனித மனங்களின் மேன்மை குணங்களையும், குருரங்களையும் பதிவு செய்துள்ளார்.

பதிவு . 01
இலங்கை தீவில் தமிழ் இனப்படுகொலை நடந்ததுக்கான வரலாற்றுக் காரணங்கள் என்ன, அரசியல்
காரணங்கள் என்ன, பூளோக அரசியல் காரணங்கள் என்ன என்பதனை மிக தெளிவான ஆதாரங்களோடு ஈழ அறிஞர் மு.திருநாவுக்கரசு அண்மையில் (2016) எழுதியுள்ள நூல் "யாப்பு".
தனி தமிழ் ஈழ கோரிக்கையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், ஈழ அரசியலை புரிந்துகொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் " யாப்பு ".
மிகவும் சுவாரசியமான மொழியில் ஆழ்ந்த அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்கியுள்ளார். "ஆகுதி" பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

துளி.92

விசுவரூபமாகிறது
விசுவாசம்
துரோகமாக...

                               14.07.2017

துளி.91

தேவதைகள் 
விளையாடும் 
இறகுபந்தாய் 
தடம் மாறி 
பயணிக்கிறது 
மனம்
சில
நேரங்களில் ...


                                            03.07.2017

துளி.90

உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும் 
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்

                                                01.07.2017

துளி.89

சுயத்தை இழந்து
சுற்றியலைகிறேன்
சுடரும் உன் அன்புக்காக...

                                              26.06.2017

6.24.2017

துளி.88

நான்காவது 
தலைமுறை
அலைக்கற்றையாய்
அலைகிறது
என் காதல்
உனைத் தேடி....


                                   24.06.2017

துளி.87

யாசித்து அல்ல
என் நேசிப்பால் 
பெறவேண்டும்
உன் காதலை ....

                         23.06.2017

துளி.86


தந்தை சொல்
கேளா தேசமிது
துவேசமே தேசபற்று
பொய்மையே ஊடக அறம்
உண்மை பேசினால்
தேசதுரோகி நீ
கத்தி பேசினால்
சொல்வதெல்லாம் உண்மை

                                                        22.06.2017

6.16.2017

துளி.85

தொடர்கிறது
நிழலாய் என்னை
உன் நினைவுகள்....

                             10.06.2017.

துளி . 84

சமதள பாதையில்
பயணிப்பவன்
தடுக்கி விழுவதால்
ஏற்படும் இழப்பும்
மலையேற்ற பாதையில்
பயணிப்பவன் தடுக்கி
விழுவதால் ஏற்படும்
இழப்பும் ஒன்றல்ல
சமதளத்தில் பயணித்து
இலக்கை அடைந்தவன்
காணும் உலகமும்
மலையேற்றத்தில் இலக்கை
அடைந்தவன் காணும்
உலகமும் ஒன்றல்லவே...

                                           09.06.2017

5.31.2017

துளி.83

நம்
இருப்பின் இடைவெளி
கூடக்கூட
நாம்
நெருக்கமாகிறோம்
இதயத்தால்...


                                    30.05.2017

5.24.2017

துளி.82

நெருங்கி வந்தால்
விலகி செல்கிறாய்
பேச தொடங்கினால்
மெளனமாகிறாய்
எப்படியென்னை மறுத்தாலும்
என் கனவெல்லாம் நீதானே...

                                                      20.05.2017

துளி.81

முடவன் மட்டுமல்ல
முயற்சி இல்லாதவனும்
ஆசை படக்கூடாது
கொம்பு தேனுக்கு...

                                        18.05.2017

துளி.80

துரோகத்தால்
வீழ்த்தப்பட்டோம் 
துளிர்விடுவோம்
மறுபடியும்

                               17.05.2017

5.17.2017

துளி .79

கருப்பு வெள்ளை 
கனவும் நீ வந்தால்
வண்ணமாகிவிடும்...

                                        10.05.2017

துளி .78

உறக்கமில்லா இரவுகளை 
பரிசளிக்கிறது
உன் நினைவுகள் ....

                                       10.05.2017

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...