11.20.2017

திரை . 01

                                                      அறம் - அற்புதம்.

சமூக வலைத்தளங்களில் மிக பாராட்டுதலைப் பெற்ற பல படங்களை ஆர்வமாக பார்க்க போய் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அறம் அப்படி இல்லை. மிக அற்புதமான படம்.

மதிவதினியின் துறைசார் விசாரணையில் தொடங்கும்
அறம் படம் கதைக்கு தேவையான வடிவ நேர்த்தியுடன் இருக்கிறது. கதைக்களம், கதைக்கு தேவையான சரியான நடிகர்கள், காட்சிக்கு தேவையான அளவுக்கு சிறப்பான வசனங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றன.

அறம் பேசும் அரசியல் மிகவும் தெளிவாக இருக்கிறது. அரசின் அலட்சியம், அதிகார அமைப்பின் சிக்கல்கள் , இந்த அரசு யாருக்கா செயல்படுகிறது என்பதையெல்லாம் சரியாக பதிவு செய்துள்ளது.

காட்டூர் மக்களின் துயரம், மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தும் உணர்வு பூர்வமாக இப்படத்தில் பதிவாகியுள்ளது.

மகனின் எதிர்காலம் குறித்து புலேந்திரனும் அவன் மனைவியும் பேசிக்கொள்வதை மகன் கேட்டுக்கொண்ருக்கும் போதும், இடைவேளை காட்சியின் போதும், இறுதிக்காட்சியி்ன் போதும் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

இப்படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் கதைக்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.

என் மானசீக குருநாதர்கள் பெயர் பட்டியலில் இயக்குனர் கோபி நயினார் பெயரையும் சேர்த்து கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...