1.31.2018

துளி . 131

ஒற்றையாளாய்
பயணிக்கிறேன்
கனவுப் பாதையில்
முன்செல்கிறாயா 
பின்தொடர்கிறாயா
என அறியாமல்
மயங்குகிறது மனம்
உறைகிறது காலம்
உன் வருகைக்காக.....

                                          31.01.2018

துளி . 130

சிக்கித் தவிக்கிறேன்
உன் 
நினைவுச் சுழலில்....

                                            30.01.2018

1.25.2018

அஞ்சலி . 01

ஞாநி எனக்கு பிடித்தமான பத்திரிகையாளர். அவருடைய ஓ பக்கங்கள்,தவிப்பு நாவல்,அவர் இயக்கிய நாடகங்கள்,கேணி சந்திப்பு, அவர் வரைந்த பாரதி ஓவியம், தீம்தரிகிட இதழ்,ஞானபாநு பதிப்பகம் மூலம் வெளியிட்ட நூல்கள், கோலங்கள் திரைப்பட இயக்கம், அவர் இயக்கிய குறும்படம், தொலைக்காட்சியில் அவர் வழங்கிய நூல் அறிமுகங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம் அவருடைய செயல்பாடுகள் பற்றி, அவருடைய வாசகனாக அல்லது பார்வையாளனாக அவரை தொடர்ந்துள்ளேன். அவருடைய பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை. சிலவற்றில் உடன்பாடில்லை.
கருத்தியல் சார்ந்து எனக்கு நெருக்கமாக உணர்ந்த ஆளுமையை இன்று மரணம் கொண்டு சென்றுவிட்டது. காலனை யாராலும் தவிர்க்க முடியாதுதான். ஆனால் கருத்தியலை பின் தொடர முடியும். ஞாநிக்கு செலுத்தும் அஞ்சலி என்பது அவர் சென்ற பாதையில் நாம் மேலும் பயணிப்பதாகவே இருக்க முடியும்.
இறுதி வணக்கம் ஞாநி....

துளி . 129

கோபுர சிற்பத்தின்
மீதமர்ந்து கரைகிறது 
ஓர்  ஒற்றை காகம் 
நீண்ட நேரமாய் 
இணைக்கான சமிக்ஞையா 
துணை யாரும்
இல்லையென்ற துயரா ....


                                                  19.01.2018

துளி . 128

மிக மகிழ்ச்சியான
சம்பவம் நான்
உன்னை சந்தித்தது
மிக துயரமான 
சம்பவம் நீ என்னை
விலகிச்சென்றது
பேரன்பை பொழிவதாக
கூறினாய் முடிவில்
பெரும் துயரை
பரிசளித்து சென்றாய்
காத்திருக்கிறேன்
மறுபடியும்
பேரன்பை சுமந்தப்படி
நீ வரும் நாளுக்கா...

                                          27.12.2017

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....