2.17.2017

துளி.32

முழுநிலவு

பனிப்பொழிவு

பேரமைதி

அச்சமூட்டுகிறது

நீ இல்லாத வீடு....


                                      17.02.2017

துளி.31

ஒற்றை மூக்குத்தி 
ஒற்றை தோடு 
உன் அழகை கூட்டுகிறது 
இன்னமும் ஒரு படி மேல் ....

                                              16.02.2017

துளி.30

உங்கள் பெயரில்
நறுமணம் வீசலாம்
உங்கள் செயலில்
துர்நாற்றம் வீசுகிறது.....

                                              16.02.2017

துளி.29

விசுவாசம்
துரோகமாக மாறுவதை
காணாது போனவர்கள்
பாக்கியவான்களே...

                                         15.02.2017

துளி.28

விழிகள் விரிய
தரிசித்துக் கொண்டு
இருக்கிறேன்
துரோகத்தின்
வண்ணங்களை.....

                                     15.02.2017

2.06.2017

துளி.27

சோலைவனத்தை
பாலை நிலமாக்கியது
தவற விட்ட
ஒற்றை சொல்.

                                  06.02.2017

துளி.26

துடைக்க துடைக்க
தூசியென படிகிறது
அறியாமை என்மேல்...

                                            04.02.2017

துளி.25

வாங்கிக்கொள்ளவே
விரும்புகிறேன்
உன் வலிகளை
கைமாற்றிக்கொள்ள
கைகுழந்தை அல்லவே
வலி என்பது....

                                               03.02.2017

2.03.2017

துளி.24

மொழிக்குளத்தில்
தூண்டியலை வீசுகிறேன்
உன்னழகை பிரதிபலிக்கும்
சொற்கள் வேண்டி......

                                                       02.02.2017

2.01.2017

துளி.23

நானும் அவனும்
ஒன்றாகவே படித்தோம்
ஒன்று முதல்
பன்னிரெண்டு வரை
இயந்திர பொறியல் படிக்க ஆசைப்பட்டவன்
கட்டிட வேலை செய்ய சிங்கபூர் சென்றான்
மக்களுக்கு சேவை செய்ய
மருத்துவம் படிப்பேன் என்ற நான்
மலுங்க மலுங்க விழித்தபடி
விமானமேறினேன் துபாய்க்கு அடிமையாக
காலங்கள் பல கடந்து
மறுபடியும் ஒன்றாக பயணிக்கிறோம்
திருமணத்திற்கு பெண் தேடி
சூரிய உதயத்தில் தொடங்கிய
பயணம் இன்னும் நீள்கிறது
அடைந்து விடுவோம் இலக்கை அந்திமத்துக்குள்
நம்பிக்கையோடு பயணிக்கிறோம்
நானும் அவனும்.

                                                                                   01.02.2017

துளி.22

நண்பா
நீ கவலை படுகிறாய்
நான் தோற்று விட்டதாய்
கணந்தோறும்
என் கனவை நோக்கி
முன் நகர்கிறேன்
முக மலர்ச்சியோடு
இது போதும் எனக்கு
கவலை வேண்டாம்
நண்பா

                                               31.01.2017

துளி.21.


என் உடலைவிட
என் மனம் வலிமையானது
என் மனதைவிட
என் உடல் தூய்மையானது.

                                                        30.01.2017

துளி.20


நவீனத்தின் துணையோடு
மரபைக்காக்க போராடும்
நாம் யார்
நவீனவாதிகளா...
மரபுவாதிகளா...            

                                                            30.01.2017

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...