2.27.2018

துளி . 146

கற்றவர்கள் நிறைந்த
நிலத்தில் தான் பசிக்கா
திருடியவனை அடித்தே
கொலை செய்தார்கள்..

கலாச்சார தொன்மை 
வாய்ந்தவர்களென வாய்கிழிய 
பேசியவர்கள் தான் 
சாதியின் பெயரால்
ஒரு அபலை குடும்பத்தை
பலாத்காரம் செய்து
படுகொலையும் செய்தனர்..

சாந்தியும் சமாதானமும் 
வேண்டியவர்களின் வாழ்வு 
சிதைக்கப்படுகிறது
அன்பை போதித்த
மதத்தின் பெயரால்

உள்ளூர் தொடங்கி
உலகம் முழுவதும்
அபலைகள் கொலை 
செய்யப்படுகிறார்கள்

குலை நடுக்கத்தோடு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தடுக்கும் வழியறியாது...

                                                  27.02.2018

துளி . 145

என்னுளிருக்கும்
குழந்தைமையை
வெளிக்கொண்டு
வருகின்றன
சில உறவுகள்...
என்னுளிருக்கும்
குரூரத்தை
வெளிக்கொண்டு
வருகின்றன வேறு
சில உறவுகள்...

                                    25.02.2018

துளி . 144

மறுபடியும் 
நிழத்தியிருக்கிறார்கள்
மாபெரும் 
வரலாற்று துரோகத்தை...

                                               24.02.2018

துளி . 143

உன் மீதான ப்ரியம் 
ஒருபோதும் 
குறையபோவதில்லை 
நீ என்னை 
மறுதலித்த போதிலும்...

                                             24.02.2018

2.24.2018

துளி . 142

நிபந்தனையற்ற
மன்னிப்பு
கோறுகிறேன்
நடந்துவிட்ட 
மன்னிக்கமுடியாத
தவறுகளுக்காக
பெருந்துயரை
தரக்கூடியதுதான்
சமயங்களில் பேரன்பும்...

                                                24.02.2018

துளி . 141

             காதல்
மந்திர கணங்களில்
மனங்கள் இரண்டும்
இடம் மாறிக்கொள்வது... 

                                                   14.02.2018

துளி . 140

சுற்றுச்சுவருக்கு வெளியே 
காற்றில் அலைகிறது 
மல்லிகை கொடி 
நேசத்தை தேடியலையும் 
ஓர் அபலையை போல....

                                              12.02.2018

துளி . 139

உன்னை திறந்த
புத்தகம் என்றாய்
வாசிக்க முயன்றேன்
பேராவலோடு...
காத்திருந்தது பேரதிர்ச்சி
நான் அறியாத
மொழியில் எழுதப்பட்ட
உன்னத கவிதை நீ...

                                         10.02.2018

2.10.2018

துளி . 138

காதல்ங்கிறது
காதலேயன்றி 
வேறேதுமில்லை....

                              10.02.2018

துளி . 137

புராண காலத்தில்
எமனின் வாகனம்
எருமமாடு என்று
கேள்விப்பட்டதுண்டு...
இடைக் காலத்தில்
சோம்பி திரிபவனை
எருமமாடு என்று
திட்டுவதும் முண்டு...
நவீன காலத்தில்
தேவதைகள் பேரன்பை
பொழியும் வார்த்தையாய்
மாறிபோனது எருமமாடு...

                                              09.02.2018

துளி . 136

எல்லா உரையாடல்களுக்கு
பின்னும் ஒரு கேள்வி
எழுப்புகிறாய்
அப்புறம்...
பேரன்பை திரட்டி
மீண்டும் ஒரு
கேள்வியை
முன் வைக்கிறேன்
மறுபடியும்
நீ கேட்கிறாய்
அப்புறம்...
நீண்ட
உரையாடலுக்கு பின்னும்
தொக்கி நிற்கிறது
உனது பேரன்பு
அப்புறம் என்றபடி....

                                   08.02.2018

துளி . 135

மகிழ்ச்சியாக 
ஓர் அடிமை சாசனத்தில் 
கையெழுத்திடுகிறேன் 
காதல்வயப்படும் போதெல்லாம்....

                                                              07.02.2018

துளி . 134

பிரியத்தின் பாதை 
மிக நீளமாகிபோனது
பிரிவை சந்திக்கையில்....

                                      06.02.2018

துளி . 133

தனித்திருக்கும் இரவுகளில் 
எதிர்பார்த்து காத்திருந்தேன் 
தேவதையின் வருகைக்காக
எதிர்பாராத திருப்பமாக
என்னிருப்பிடம் தேடி
வருகைபுரிந்தது சாத்தான்...

                                                 05.02.2018

2.03.2018

துளி . 132

பனியில் நனைந்து
சுற்றுச்சுவருக்கு வெளியே 
தலைநீட்டியபடி காத்திருக்கிறது 
ஒற்றை செம்பருத்தி பூ
தன்னை கொய்து சூடிக்கொள்ளும் 
தேவதையின் வருகைக்காக...


                                                              01.02.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...