1.27.2017

துளி.19

என் மனதை கனமாக்கி
கடந்து செல்கிறது
பின்னிருக்கை காலியான
இருசக்கர வாகனம்
தேவதையின் இயக்கத்தில்...

                                                                      27.01.2017.

துளி.18

தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் மறுபடியும்
தர்மம் வெல்லும்....
- பாரதி
மறுபடியும்
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வாது யிருக்க
சூத்திரம் யேதும்மில்லை
யாரிடமும்...

                                                     27.01.2017

1.11.2017

துளி.17

மழை என விழுகிறது
உன் பார்வை
மண் என கரைகிறது
என் மனம்....

                                          11.01.2017.

துளி.16

நம் பிரிவுக்கு 
பின் வந்த நாட்களில் 
நீ இட்ட கோலங்களில் 
அன்னங்கள்இரண்டு 
 அலகோடு அலகு வைத்து 
அன்பை பருகுகின்றன..


                                         10.01.2017.

துளி.15

கருணையற்றது காலம்
மவுனத்தை மையத்தில் வைத்து
கண்ணாமூச்சியாட வைக்கிறது... 


                                                09.01.2017.

துளி.14

தான் அழகி இல்லை 
என சொல்வதால் 
அவள்
பேரழகியாய் தெரிகிறாள்...

                                       09.01.2017.

துளி.13

மலர் வனத்துக்கு 
நீ வந்த போது 
மலர்கள் உன் காலடியில் 
விழுந்து மரணித்தன 
உன் கூந்தலை அலங்கரிக்க 
முடியாமல் போன துயரத்தில்..


                                                    06.01.2017.

துளி.12

புள்ளிகளை
சிறைப்பிடித்து
கோலமென
பெயரிடுகிறாய் நீ...

                                   04.01.2017

துளி.11.

புவியீர்ப்பு விசையா
விழியீர்ப்பு விசையா
சிகரத்தின் மீது அவன்....

                                       03.01.2017

துளி.10

நீ சிகப்பு என்பாய்
நான் கருப்பு என்பேன்
நீ அழகு என்பாய்
நான் அறிவு என்பேன்
நீ ஆன்மீகம் என்பாய்
நான் அறிவியல் என்பேன்
நமக்குள் ஒத்துபோக ஒன்றுமேயில்லை
ஆனாலும்
ஒன்றாகவே பயணிக்கிறோம்.


                                                      02.01.2017.

துளி.09

கண் சிமிட்டாமல்
பார்க்கிறேன்
கண் சிமிட்டும்
உன்னழகை......

                                29.12.2016

துளி.08

மார்கழி பனியில்
தெருக்கள் தோறும்
காத்துக் கிடக்கின்றன
தேவதைகளிட்ட கோலங்கள்
யாருடைய வருகைக்காக.....

                                        27.12.2016

துளி.07

நீ
அறிந்த மொழிகளின்
நிலவெளியில் பயணிக்கிறேன்
நின் நினைவுகளோடு. . .
நாம்
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருந்தபோதிலும்.. .

                                                26.12.2016

துளி.06

அன்போடு ஆரத்தழுவிய
கரங்களே ஆரம்பித்து
வைக்கலாம் துரோகத்தின்
தொடக்க புள்ளியை...

                                           23.12.2016

துளி.05

தேவதைகள்
வாழும் நகரில்
வாழ்கிறேன்
தன்னந்தனியாக....

                                                                   21.12.2016

துளி.04

ஊர் எல்லாம் சொல்லி பெருமை பட
குலபெருமை ஏதும்மில்லை எனக்கு
யாருக்கும் தெரியாமல் மறைக்க
குல அவமானமும் இல்லை எனக்கு
அலைகிறேன் அடையாளம் நோக்கி.
                                                        
                                                                 17.12.2016

துளி.03

பொருளற்ற ஒரு சொல்
பொருள் பொதிந்த ஒரு பார்வை 
புரிந்து கொள்வேன் நான்.

                                                           10.12.2016 

துளி.02

காதலிக்கவும் இல்லை
காதலிக்கபடவும் இல்லை
கடந்து விட்டது
கண(னா) காலம்.
                                                    09.12.2016.

துளி.01


மழை காலத்தில்
துளிர்த்த.....
நம் நட்பு


கோடை காலத்தில்
கருகி போனது
ஏன் தோழி. 



                                         03.10.2016


துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...