3.31.2020

பதிவு . 35

பிரபஞ்சனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் பி.என்.எஸ்.பாண்டியன்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் முதலாமாண்டு நினைவேந்தலில் வெளிடப்பட்ட இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. மனிதர்களில் பலவகையானவர்கள் இருப்பதை போலவே அந்த மனிதர்களை படைப்பில் கொண்டுவரும் படைப்பாளிகளும் பலவகையினராக இருக்கின்றனர்.
பிரபஞ்சன் அன்பானவர்களின் வாழ்வை எழுதி சென்ற அசலான அன்பான மனிதர் மற்றும் படைப்பாளி. அவருடைய கதைகளில் வரும் மனிதர்கள் மிகவும் அன்பானவர்கள். மேன்மையான குணம் கொண்டவர்கள். பிரபஞ்சன் மிகவும் மென்மையான மொழியில் தன் கதைகளை நம் மனதில் எளிதில் பதியும்படி எழுதியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
ஒர் அறிவு உயிரான முருங்கை மரத்துக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் பிரும்மம், அஃறிணையான வேட்டிக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் அப்பாவின் வேஷ்டி, கற்பிப்பதற்காக தன் வாழ்க்கையை அற்பணித்த கமலா டீச்சர், கணவனின் இரண்டாவது மனைவிக்கு நல்லது செய்துவிட துடிக்கும் யாசுமின் அக்கா, தன்னை கொல்லவந்தவனை யாருக்கும் காட்டிக்கொடுக்க விரும்பாத மக்களை நேசிக்கும் அண்ணாச்சி.
ஐந்தறிவு உயிரான பசு மாட்டுக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் மனுஷி, உலகுக்கே சமத்துவம் சொல்லிய பிரெஞ்சு அரசோடு சுயமரியாதைக்காக சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞரின் கதையை சொல்லும் பாதுகை, வழிதவறிய மாணவியை நல்வழிபடுத்தும் ஆசிரியரின் கதையை சொல்லும் மரி என்கிற ஆட்டுக்குட்டி, மத ஆதிக்கத்திலிருந்துகொண்டு மனிதநேயத்தை காக்க முடியாது என வெளியேற்றம் செய்த மடாதிபதி.
குமாரசாமியின் பகல் பொழுது கதையில் சென்னை நகர வாழ்வின் அவலத்தையும், ஒரு மதிய பொழுதில் நெரூதாவின் வாழ்வை சொல்லும் திரைப்படம் பார்க்க சென்றுவந்த அனுபவத்தையும் சொல்கின்றன. நகரத்தில் தனிமையில் வாழ நேர்ந்த மருத்துவரின் துயரை சொல்லும் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கிறது கதை, இறந்தவரை புகைப்படம் எடுக்க சென்றுவந்த கதையான ஒரு நெகடிவ் அப்ரோச், பிளையார் கோவிலை விலைபேசும் கதையான ஓடாத பிள்ளையாரும் ஓடிய காவேரியும்.
பிரபஞ்சன் வாழ்ந்த புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களே அவருடைய கதைளின் களமாக உள்ளன. சின்ன சின்ன வாக்கியங்களின் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும், அவலங்களையும் நம்முள் எளிதாக கடத்திவிடுகிறார்.
பிரபஞ்சனின் இறுதிகாலத்தில் அவருடனிருந்து அவரை கவனித்துக்கொண்ட படைப்பாளி பி.என்.எஸ்.பாண்டியன் இந்த தொகுதிக்கான கதைகளை தேர்வு செய்து தொகுத்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுகளும்.
இந்த தொகுப்பிலுள்ள எல்லாகதைகளுமே அன்பானவர்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. மெல்லிய நகைச்சுவை எங்கும் நிறைந்திருக்கிறது.
இந்த தொகுப்பை 2019 ஆண்டில் முதல் பதிப்பாக, Discovery Book Palace சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.
இந்நூலை வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த நண்பர் Jega Deesan S -க்கு என்மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                31.03.2020.

3.30.2020

வரி . 16

மனிதன் பலவீனங்களால் சூழப்பட்டவன்.                                                                                                                                                                                                                                                                                                                        29.03.2020

பதிவு . 34

சல்வா ஜூடும் – சா. திருவாசகம்
நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை தொகுதியை மிகவும் விரைவாக வாசித்து முடித்தேன். அந்த சிறுகதை தொகுதியின் பெயர் சல்வா ஜூடும். நூலாசிரியரின் பெயர் சா.திருவாசகம். இவருடைய கதைகளை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஆனால் கதைகளை வாசிக்க வாசிக்க மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரமுடிகிறது.
இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகள் உள்ளன். அவற்றில் எட்டு கதைகள் தனியார் கல்லூரிகளை கதைக்களமாக கொண்டுள்ளது. குறைந்த சம்பளத்தில் வேலை நிரந்தரமற்று வேலைப்பார்க்கும் பேராசிரியர்களின் கனவுகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு, பணி நிரந்தரத்திலிருக்கும் பேராசிரியர்களுக்கும் இவர்களுக்குமான உறவு, ஆண் பெண் நட்புகள், பெண் பேராசிரியர்களின் சங்கடங்கள் என பலவகையான வாழ்க்கை இந்த எட்டு கதைகளிலும் பதிவாகியுள்ளது. சமகால வாழ்வின் ஒருபகுதி மிகவும் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் இந்த கதைகளில் பதிவாகியுள்ளது.
அடுத்தப்படியாக மூன்று சிறுகதைகள் திரைப்படத்துறையை பின்புலமாக கொண்டுள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும்மான வேறுபாடுகளை கொண்டுள்ள மனிதர்கள் எல்லா துறைகளிலும் காணப்படுவார்கள்தான் என்றாலும் நிறங்கள் நிறைந்த திரைத்துறையில் நிறமாறும் மனிதர்களின் எண்ணிக்கை சற்றுக் கூடுதல்தான் போலும். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்ற ஜீ.நாகராஜனின் மேற்கோளை நமக்கு அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் போலும் இத்துறையில் மட்டும்.
இரண்டு சிறுகதைகள் மட்டும் வேறுவேறு கதைகளன்களை கொண்டவைகளாகும். இயற்க்கைக்கும் மனிதனுக்குமான உறவு, மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு என்றும் விசித்திரமானதாகும். மழையை விரும்பும் மனிதர்களுக்கு அருகிலேயே மழையை வெறுப்பவர்களும், நேசத்தை வெறுப்பவர்களுக்கு மிக அருகிலேயே நேசத்தை விரும்புகிறவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
கதைகளில் காத்திரமான விசயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் கதைச்சொல்லும் முறையில் எல்லாக்கதைகளிலும் நகைச்சுவை மிளிர்கிறது. சிலக் கதைகளை தொடர்ந்து வாசிக்க முடியாது சிறிது இடைவேளை தேவைப்படும் அந்தளவுக்கு நம்மையறியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுகிறார். அரசு, சாதி, மதம், பாலினம் மற்றும் வர்க்கம் சார்ந்து வெளிப்படும் வக்கிரங்களையும் வன்முறையையும் எளிய மொழியில் அதே சமயம் அதன் வலிகளை அதன் வீரியம் குறையாமல் நம்முள் கடத்திவிடுகிறார். . கதைச்சொல்லி சா.திருவாசகம் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த தொகுதியின் தலைப்பு கதையான சல்வா ஜூடும் அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் மிகவும் முதன்மையான சிறுகதையாகும். உலகின் மிகப்பெரிய சனநாயக குடியரசு என்றும், அகிம்சாமூர்த்தி காந்தியை தன் தேசதந்தை என்றும் கூறிக்கொள்ளும் இந்திய ஒன்றியத்தின் கோரமுகத்தை இந்த சிறுகதை சிறப்பாக பதிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் போராளியாக இருக்கும் மக்கள் களத்துக்கு ஏன் வரமுடியவில்லை. வந்தால் என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒருவன் தன்னை போராளி என்று உணரும் தருணத்திலேயே அந்த எண்ணம் எப்படி காணாமல் போகிறது எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த சிறுகதை உள்ளது.
இந்த நூலை கருப்பு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2018 ஆண்டு இந்நூலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது.
இந்நூலை வாசிக்கும் வாய்ப்பை சாத்தியமாக்கிய நண்பர் செந்தில் வேலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     15.03.2020.

துளி . 290

தீராத் துயரங்களைத்                                                                                     தீக்கறையாக்கிவிடுகிறது                                                                                          தேவதையின் 
ஒற்றைப் பார்வை....                                                                                                                                                                                                                                                                                                                                    13.03.2020.

துளி . 289

புரட்சி
எழுச்சி
மாற்றம்
ஏமாற்றம்
மறுபடியும்
ஒருமுறை
நிரூபித்துள்ளார்
தானொரு
மகாநடிகன் என...                                                                                                                                                                                                                                                                                                                                    12.03.2020.

துளி . 288

இந்த நாள்
இனிய நாளாக
பிரகாசிக்க 
தொடங்குகிறது
ஒரு 
தேவதையின்
சிறு
புன்னகையால்...                                                                                                                                                                                                                                                                                                                                          10.03.2020.

துளி . 287

பேரன்பு
உன்னை
வெறுக்க
எனக்கு
ஆயிரம்
காரணங்கள்
இருக்கின்றன ...
என்பதிற்கு
பதிலாக
சொன்னேன்
உன்னை
நேசிக்க
எனக்கு
ஆயிரத்தொரு
காரணங்கள்
இருக்கின்றன ...                                                                                                                                                                                                                                                                                                                                   10.03.2020.

துளி . 286

இரண்டும்
சமமென
சொல்கிறாய்
சமத்துவமும்
பிரிவினையும்
சமமாவதெப்படி.                                                                                                                                                                                                                                                                                                                                       03.03.2020.

துளி . 285

துயரில் 
வீழும் 
மனிதர்களுக்கா
துயருவதைத் 
தவிர்த்து
வேறென்ன
செய்யமுடிகிறது
பொருளற்ற
இவ்வாழ்வில்.                                                                                                                                                                                                                                                                                                                                          03.03.2020.

பதிவு . 33

சுயாதீன திரைப்பட விழா 2020
பிப்ரவரி 8 மற்றும் 9 தேதிகளில் சென்னை சாலிகிராமம் பிரசாத் திரையரங்க அரங்குகளில் நடைப்பெற்ற மூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் கலந்து கொண்டு திரைப்படங்கள் பார்த்தேன். தொடர்ந்து மூன்று வருடங்களாக கலந்து கொள்கிறேன். அதுவே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் ஆண்டு கொஞ்சம் ஆடம்பரமாக நடைப்பெற்ற விழா இந்த ஆண்டு எளிய முறையில் சிறப்பாக நடந்து முடிந்ததுள்ளது.
இந்த வருடம் விழாவில் முதல் நாள் இரண்டு திரைப்படங்களும் இரண்டு குறும்படங்களும் மற்றும் ஒரு ஆவண படமும், இரண்டாவது நாளில் நான்கு முழு நீள படங்களும் ஆறு குறும்படங்களும் பார்த்தேன். அவற்றுள் சில படங்களை பற்றிய என்னுடைய கருத்துகளை இந்த கட்டுரையில் பதிவு செய்கிறேன்.
þó¾¢ ¦Á¡Æ¢Â¢ø ¬„¢‰ ÌÁ¡÷ þÂ츢 ¬Å½ À¼õ Beauty of Life ( Å¡úÅ¢ý «ÆÌ ) þÐ «Á¢Ä Å£îÍìÌ ¬Ç¡É ãýÚ ¦Àñ¸û ÁüÚõ µ÷ ¬ñ ¬¸¢§Â¡Ã¢ý Å¡ú× ÌÈ¢ò¾ À¾¢Å¡Ìõ. ¿¡ýÌ §Àâý Å¡ú쨸 ¸¨¾ ÀÄâý §¿÷¸¡½ø¸û ãÄõ À¾¢× ¦ºöÐûÇ¡÷. «ó¾ §¿÷¸¡½Ä¢ø «Å÷¸û Á£Ð «Á¢Äõ Å£ºôÀð¼ ¾Õ½õ, «¾ü¸¡É ¸¡Ã½í¸û, «Á¢Ä Å£îÍì¸¡É À¢ý ÁÕòÐÅ º¢¸¢î¨ºÂ ÀüȢ ŢÀÃí¸û, ¿£¾¢ÁýÈ ¿¼ÅÊ쨸¸û, þÅ÷¸Ç¢ý ¾¢ÕÁ½ Å¡ú쨸 ÁüÚõ þÅ÷¸Ç¢ý ÅÄ¢¸û §Å¾¨É¸û ÁüÚõ ¯ÇÅ¢Âø §À¡Ã¡ð¼í¸û ±É «¨Éò¨¾Ôõ À¾¢× ¦ºöÐûÇ¡÷.
þó¾ À¼ò¾¢ý ºã¸ §¿¡ì¸õ ±ÉìÌ Á¢¸×õ À¢Êò¾¢Õó¾Ð. ¿õãâÖõ «Á¢Ä Å£îÍ ¿¨¼ô¦ÀüÚûÇÐ. ¬Å½ÀÎò¾¢Ôû§Ç¡Á¡ ±É ±ýÛû §¸ûÅ¢ ±Ø¸¢ÈÐ. ´Õ Á¡½ÅÉ¡¸ þôÀ¼ò¾¢Ä¢ÕóÐ ¸üÚ ¦¸¡ûÇ ¿¢¨È þÕ츢ÈÐ. ¿õãâø ¦¾¡¼÷óÐ º¡¾¢Â ¬Å½ ¦¸¡¨Ä¸û, ¸Æ¢× ¿£÷ «¸üÚõ §À¡Ð ÀĢ¡Ìõ ÐôÒÃ× ¦¾¡Æ¢Ä¡Ç÷¸û ÁüÚõ ÍüÚ ÝÆø º£÷§¸Î¸û ÀüȢ ¬Å½ôÀ¼í¸û ±Îì¸, þíÌõ ¿¢¨È ŢºÂí¸û þÕì¸ò¾¡§É ¦ºö¸¢ÈÐ.
பங்களா தேச படமான Phagun Haway - Tauquir Ahmed என்னை மிகவும் கவர்ந்தது. 1952ல் ஒன்றுபட்ட பாகிஸ்தானின் ஒரு பகுதியான பங்களா தேச பகுதியில் கதை நடக்கிறது. ஒரு தேசம் ஒரு மொழி என்ற அடைப்படையில் உருது மொழி திணிக்கப்படுகிறது. அந்த கொள்கையினால் பாதிக்கப்பட்ட வங்க மொழி பேசும் மக்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். இன்றைய இந்திய சூழலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பரதேசி முதல் பறவைகள் வரை அனைவருக்கும் உருது மொழி கற்றுக்கொடுக்க முயற்சிக்கும் காட்சிகள் ஒரு புறம் சிரிப்பை வரவழைக்கிறது மற்றொரு புறம் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. ஒரு மொழிக்கொள்கையின் விபரீதங்களை புரிந்துக்கொள்ளமுடிகிறது. நம்மூரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. இந்தி எதிர்ப்பு பற்றிய ஆவண அல்லது முழுநீள படம் எடுக்கலாம் இல்லை எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இந்தபடம் தருகிறது.
மலையாள படமான் Shavam - Don Palathara Á¢¸×õ º¢ÈôÀ¡¸ þÕó¾Ð. §¸ÃÇ¡Å¢ý ¸¢Ã¡ÁôÒÈò¾¢ø ź¢ìÌõ ´Õ ¿Îò¾Ã ¸ò§¾¡Ä¢ì¸ ÌÎõÀò¾¢ø ´Õ ÁÉ¢¾÷ þÈóРŢθ¢È¡÷. «¾¢¸¡¨Ä ¦¾¡¼í¸¢ ÓýÀ¸ø Ũà «íÌ ¿¼ìÌõ ºõÀÅí¸Ç¢ý ¦¾¡Ìô§À þò¾¢¨ÃôÀ¼õ.  ´Õ ţΠ«¾ý ¯ðÒÈõ ÁüÚõ ¦ÅÇ¢ôÒÈõ º¡÷ó¾ À̾¢Â¢ø ÁðΧÁ Óظ¨¾Ôõ ¿¼ì¸¢ÈÐ. Ðì¸ Å£ðÊüÌ ÅÕõ ÁÉ¢¾÷¸Ç¢ý ¦ºÂøÀ¡Î¸¨Ç À¾¢× ¦ºöž¢ë§¼  ÁÉ¢¾÷¸Ç¢ý Å¢§¿¡¾ Ì½í¸¨Ç þôÀ¼õ  À¾¢×¦ºö¸¢ÈÐ. Ðì¸Å£ðÊø ¿¼ìÌõ ÀÄ ¦ºÂø¸û ¿ÁìÌ º¢Ã¢ô¨À ÅèÅ츢ÈÐ. ´§Ã þ¼ò¾¢ø ¸¨¾ ¿¼ó¾¡Öõ À¼õ À¡÷ì¸ Á¢¸×õ ÍÅẢÂÁ¡¸ þÕ츢ÈÐ.  ¿õãâÖõ Å¢¾Å¢¾Á¡É º¼í̸û ºõá¾í¸û þÕì¸ò¾¡ý ¦ºö¸¢ýÈÉ. «ÅüÈ¢ý À¢ýÒÄò¾¢ø ±ýÚ ºÅõ §À¡ýÈ º¢ÈôÀ¡É À¨¼ôÒ¸û ÅÃô§À¡¸¢Èதோ.
சிறந்த சுயாதீன படத்துக்கான விருது பெற்ற சிங்கள மொழிபடமான Gaadi - Prasanna Vithanage À¼Óõ À¡÷ò§¾ý. þó¾ À¼ò¾¢ý ¸¨¾ ¿¢¸Øõ ¸¡Äõ 1814. ¬í¸¢§ÄÂ÷¸û þÄí¨¸ìÌû °ÎÕÅ ¦¾¡¼í¸¢Â ¸¡Ä¸ð¼õ. «ÃÍìÌ ±¾¢Ã¡É ÒÃðº¢Â¢ø «Ãº÷¸û §¾¡üÚÅ¢¼ «øÄÐ Á¨ÈóÐ ¦¸¡ûÇ «Ãº ÌÄ ¦Àñ¸û º¢¨ÈôÀ¢Êì¸Àθ¢È¡÷¸û. «Å÷¸û Óý þÕ Å¡öôÒ. ´ýÚ ¸Øò¾¢ø ¸ø¨Äì¸ðʦ¸¡ñÎ ¾ñ½£Ã¢ø Å£úóÐ Á¡Éò§¾¡Î ¦ºòЧÀ¡¸Ä¡õ. Áü¦È¡ýÚ º¡¸ Å¢ÕõÀÅ¢ø¨Ä ±ýÈ¡ø ¡º¢òÐ ¦À¡Õû ¦ÀüÚ ¯Â¢÷ Å¡Øõ §Ã¡Ê¡ ºã¸ ¬ñ¸Ç¢ø ´ÕÅÛìÌ Á¨ÉŢ¡¸¢ Á¡ÉÁ¢ÆóÐ ¯Â¢÷ Å¡ÆÄ¡õ.
º¢¨ÈôÀ𼠫ú ÌÄ ¦Àñ¸Ç¢ø þÇõ¦Àñ¦½¡Õò¾¢ þÃñ¼¡ÅÐ Å¡öô¨À §¾÷¦¾Î츢ȡû. ¬¼õÀà ¯¨¼¸§Ç¡Îõ ¬ÀÃ½í¸§Ç¡Îõ Å¡úó¾ «Åû Óóதானை «½¢Ôõ ¯Ã¢¨ÁÂüÈ Üð¼ò§¾¡Î Å¡Æ நிர்பந்திக்க படு¸¢È¡û. «ó¾ Üð¼ò§¾¡Î «Åû þÂóÐ Å¡úó¾¡Ç¡ þø¨Ä¡ ±ýÀÐ Á£¾¢ ¸¨¾Â¡Ìõ. ´Õ ÒÈõ «Ãº ¸¨¾Â¡¸×õ Áü¦È¡ÕÒÈõ §Ã¡Ê¡ ºã¸ì ÌØì¸Ç¢ý ¸¨¾Â¡¸×õ À¢È¢¦¾¡Õ ÒÈõ «Ãº ÌÄ ¦Àñ ¿¡§¼¡Ê ÌÄ ¬ñ þÕÅÕìÌÁ¡É ¸¡¾ø ¸¨¾Â¡¸×õ þÕ츢ÈÐ.
ஒரு சின்ன முன்கதை. À¢ÃºýÉ¡Å¢ý Óó¨¾Â À¼í¸Ç¢ø ´ýÈ¡É With You, Without You ( உன்னோடும், நீ இல்லாமலும் ) படம்  பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தபடம். அந்த படம் ஒரு புறம் காதல் கதையாகவும் மற்றொரு புறம் அரசியல் கதையாகவும் இருந்தது. அந்த காதலும் அரசியலும் எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. சிறுபான்மை மக்களுக்கு பெரும் தீமையை செய்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு திரைக்கலைஞனின் பார்வையை சொன்னபடமது. அந்த பார்வை விசாலமானது.      
இப்போது Gaadi படத்துக்கு வருவோம். நடிகர்கள் தேர்வு, நடிகர்களின் நடிப்பு திறன், படமாக்கப்பட்ட விதம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என அனைத்தும் சிறப்பாகவேயுள்ளது. திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. எனக்கு கதை சார்ந்தும் கதையின் முடிவு சார்ந்தும் மூன்றுகேள்விகள் தோன்றுகின்றன.  அதற்குமுன் படத்தின் முடிவை மிக சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். அரச குல பெண் பல இழப்புகளுக்கு பின் தன் மானத்தை இழந்து விடுவதில் மகிழ்ச்சியடைகிறாள்.
முதல் கேள்வி அரசியல் சார்ந்து ஒரு பெண் தன் மானத்தை காக்க போராடுகிறாள். அதனால் அவள் குழுவுக்கு பல இழப்புகள் வருகிறது. அந்த இழப்புகளை பார்த்ததும் அவள் தன்மானத்தை இழக்க சம்மதிக்கிறாள். அதனால் அவள் மகிழ்ச்சியடைகிறாள். இது கதையின் முடிவு. அந்த பெண்ணை ஈழ தமிழர்கள் என்றும், அவள் மீது அதிகாரம் செலுத்தியவர்களை சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்றும் எடுத்துக்கொண்டால் தோன்றும் அர்த்தம் விபரீதமாக இருக்கிறது. இப்படி யோசிப்பது சரியா என்று என்னிடம் கேட்டால் படம் முடிந்ததும் எனக்கு இதுதான் முதலில் தோன்றியது என்பதே என்பதிலாகும். போராடினால் இழப்பு வரும். அதனால் போராடதே மானம் போனாலும் பரவாயில்லை. உயிரோடு இருப்பதை நினைத்து மகிழ்ச்சிக்கொள் என்று சொல்வதாக எனக்கு தோன்றுகிறது.
இரண்டாவது கேள்வி ஒரு காதல் கதை என எடுத்துக்கொண்டால் ( திரையிடலுக்கு பிறகான உரையாடலில் இதை ஒரு காதல் கதையாகவே எடுக்க விரும்பினேன் என்று இயக்குனர் கூறினார் ). கதையின் முடிவிலிருந்து எனக்கு தோன்றுவது ஒரு பெண் தன் சுயத்தை இழந்து அவளின் இணையான ஆணை பின்தொடர்வதே அவளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்ற பொருள் தருகிறது. நவீன கால பெண்ணிய சிந்தனையில் இந்த பொருளின் இடம் என்ன. இவ்வளவு இழந்தபின் நீ மானத்தை இழக்க தேவையில்லை என்று அந்த ஆணாவது சொல்லிருக்க மாட்டானா. அதுதானே உண்மையான காதலாக இருந்திருக்க முடியும்.
மூன்றாவது கேள்வி கதையின் போக்கில் எனக்கு எற்படும் யதார்த்தம் சார்ந்த சிக்கல்கள். அரச குல பெண் மானத்தை விட உயிர் பெரியது என கருதியதால் உயிர்விட மறுத்தவள். ரோடியா இனக்குழுவிற்கு வந்தபிறகு அவளிடம் பெரியதாக மனமாற்றம் நிகழவேயில்லை. அந்த ஆணிடமும் எந்த மாற்றமும் நிகழவில்லை. சொகுசு வாழ்விலிருந்து கடுமையான வாழ்நிலைக்கு வந்த பின், அந்த வாழ்வை மாற்றவோ அல்லது அந்த வாழ்விலிருந்து விடுவபடவோ அவள் ஒன்றுமே செய்யவில்லை. ரோடியா ஆணின் பின்னாலேயே போய் கொண்டிருக்கிறாள். அவனது அன்பையும் அவள் புரிந்து கொள்ளவில்லை. கதையின் இரண்டாம் பகுதில் அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து பயணிக்க தொடங்குகிறார்கள். அவர்கள் பழைய சூழல்களிலிருந்து வேறு சூழலுக்குள் நுழைகிறார்கள். ஆனால் இறுதிவரை அவர்களின் மனம் மட்டும் மாறுதல் அடைவதில்லையே ஏன். புற சூழலும்  போராட்டமும் மனதில் மாற்றத்தை உருவாக்காதா.
சுயாதீன படவிழாவில் பார்த்த படங்களில் Gaadi படம் மட்டுமே என்னுள் அதிக கேள்விகளை எழுப்பியது என்றால் அது மிகையாகாது..
இந்த திரைப்பட விழாவில் நான் பார்த்த குறும்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த குறுப்படம் Time and Again - Rachael Dax. þó¾ôÀ¼õ þí¸¢Ä¡ó¾¢ø ¯ÕÅ¡ì¸ôÀð¼Ð. «ÚÀÐ ÅÕ¼í¸ÙìÌ À¢ÈÌ ºó¾¢ìÌõ þÃñÎ ¦Àñ¸Ç¢ý(ÓýÉ¡ø ¸¡¾Ä÷¸Ç¢ý) ¸¨¾ þÐ. «Å÷¸û þ¨¼ôÀð¼ ¬ñθǢý ²ì¸í¸¨ÇÔõ ²Á¡üÈí¸¨ÇÔõ ¸¼óÐ ´ÕŨæ¡ÕÅ÷ ±ôÀÊ ÒâóÐ ¦¸¡û¸¢ýÈÉ÷ ±ýÀ§¾ þ츨¾Â¡Ìõ. «Å÷¸Ç¢ý ¯½÷׸§Ç¡Î ¿õ¨ÁÔõ ´ýÈ ¨ÅòРŢθ¢ýÈÉ÷. நான் பார்த்த Queer Lens படங்களில் இது§Å மிகவும் தரமான À¼õ ±ýÚ Ð½¢óÐ ¦º¡ø§Åý.
லிங்கன், தித்திப்பு மற்றும் உறவுகள் தொடர்கதை இந்த மூன்று தமிழ் குறும்படங்களும் எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. மூன்று கதைகளிலும் கதைமாந்தர்கள் கதையின் மையத்தை விட்டு வேறு எங்கெங்கோ அலைந்து கொண்டுள்ளனர்.
Back then when I started walking ±ýÈ ÌÚõÀ¼Óõ, A Day A Night என்ற முழுநீள படமும் ( இரண்டுமே மலையாள மொழி படங்கள் ) ±ÉìÌ ¦ÀÕõ ஏமாற்றத்தை தந்தவையாகும். சுயாதீன திரைப்பட விழாவில் என்னத்தான் படம் போடுகிறார்கள் என்று வந்த யாரேனும் முதலில் இந்த இரண்டு படங்களையும் பார்த்தால் மறுபடியும்  திரைப்பட விழா பக்கமே வரமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
இந்த திரைப்பட விழாவில் பார்த்த எல்லோராலும் பாரட்டப்பெற்ற தமிழ் படõ  Window Seat. இதை நான் தவறவிட்டுவிட்டேன். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இந்த விழாவினை ஏற்பாடு செய்த தமிழ் ஸ்டியோவுக்கும் அதன் தன்னார்வலர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும்.

                                                                                                                            - படச்சுருள் - மார்ச் 2020.




துளி . 284

உன்னை விட்டு
விலகுவதில்லையென                                                                                 பிடிவாதத்தோடுதான்
இருந்தேன்
ஆசைகளை 
நிராசைகளாக்கும் வாழ்வு                                                                                     அதெற்கெல்லாம்                                                                                                    அனுமதிக்கிறதா என்ன.                                                                                                                                                                                                                                                                                                                                   02.03.2020.

துளி . 283

உடையில் நாகரிகம்
உள்ளத்தில் காட்டுமிராண்டி.                                                                                                                                                                                                                                                                                    ( தில்லி வன்முறையின்போது )                                                                                                                                                                                                                                                                                                        27.02.2020.

துளி . 282

வளர்ச்சி
முன்னொரு காலத்தில்
தீபந்தங்களால்
சுட்டு எரித்தனர்
சுடர்விட்ட குழந்தைகளை,
பின்னொரு காலத்தில்
தலைக்குமேல் உயர்த்திய
நீண்ட வாளால்
கர்பிணிகளின் வயிற்றை
கிழித்துக் கொன்றனர்,
குற்றமற்றவர்களை
கொன்று குவிக்குக்
வெறியோடு இன்று
தூப்பாக்கியால்
குறிப்பார்க்கிறார்கள்,
வளர்ச்சியின் ஆதரவாளர்களே
இப்போதாவது நேர்மையாக
பதில் சொல்லுங்கள்
நீங்கள்
சொன்ன வளர்ச்சி
என்பது இதுதானா,
சனநாயகம் காக்குமா
சாகடிக்கப்படும் மக்களை.                                                                                                                                                                                                                                                                                         ( தில்லி வன்முறையின் போது )                                                                                                                                                                                                                                                                                                                       26.02.2020.

துளி . 281

வளர்ச்சி வளர்ச்சி 
என்றதெல்லாம் 
வன்முறையை தானோ.                                                                                                                                                                                                                                                                                            ( தில்லியில் வன்முறைகள் நிகழ்ந்தபோது )                                                                                                                                                                                                                                                                                    26.02.2020.

துளி . 280

கருணையற்ற காலம்
கருணையோடு 
முடித்துவைத்தது 
முடிவில்லா தேடல் 
கொண்டவனின் வாழ்வை...                                                                                                                                                                                                                                                                                     ( வேலு சார் நினைவாக )                                                                                                                                                                                                                                                                                                                                    21.02.2020.

துளி . 279

ஆயிரமாயிரம்
கனவுகளுடன்
காணாமல் போனது
காற்றில் துடித்த
சுடர் ஒன்று.                                                                                                                                                                                                                                                                                                                 ( வேலு சார் நினைவாக )                                                                                                                                                                                                                                                                                                                                              21.02.2020.

துளி . 278

வேறு எதுவும் வேண்டாம்
உன் பார்வை 
ஒன்றே போதும் 
உயிர்தெழுவேன் நான்.                                                                                                                                                                                                                                                                                                                                  21.02.2020.

பதிவு . 32

சினிமா தயாரிக்கும் கலை; புதிய தயாரிப்பாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்

ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தால் முதலில் தயாரிப்பாளராக தன் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு புது தயாரிப்பாளருக்கு சினிமா...

சா.ரு.மணிவில்லன்தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு தோராயமாக சுமார் 200 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சுமார் 75 சதவீத தயாரிப்பாளர்கள் புதியவர்கள். அவர்களில் வெற்றி பெற்றவர்கள் என கணக்கிட்டால் மிகவும் குறைவு. ஒரு பத்து சதவீதம் (15 பேர்கள்) அளவுக்குகூட வெற்றி இல்லை. ஆனாலும், தொடர்ந்து புது படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வளவு தோல்விகள் ஏற்படக் காரணங்கள் என்ன என்று யோசித்தால் பல காரணங்களை (கதநாயகர்களின் அதிக சம்பளம், திரையரங்குகளில் வெளியிடும் படங்களின் வசூல் தொகைகளில் ஏமாற்றம், படங்கள் வெளியான அன்றே திரைப்படம் இணையத்தில் வெளியாவது, அரசின் வரிகள், படத்துக்கு கடன் வாங்கியதுக்கு கட்டவேண்டிய வட்டி, படத்தயாரிப்பில் ஏற்பட்ட காலதாமதம், படத்தின் கதைக்கு அதிகமான தயாரிப்பு செலவு) சொல்ல முடியும். இவற்றில் மிகவும் முக்கியமானது தயாரிப்பாளரின் தவறான முடிவுகளினால் ஏற்படும் பொருள் இழப்பாகும்.
ஏன் தயாரிப்பாளர் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று யோசித்தால் புதிதாக படத் தயாரிப்புக்கு வரும் தயாரிப்பாளருக்கு திரைத்துறையின் செயல்பாடுகள் புரியவில்லை அல்லது பிடிபடவில்லை. அதை கற்றுகொள்ள அவருக்கு நேரமில்லை. ஏனெனில், அவர் வேறொரு துறையில் தொழில் செய்து வெற்றி பெற்றவர். அந்த தொழிலை கவனித்துக்கொண்டே திரைப்படம் தயாரிக்கவும் வருகிறார். அவரிடம் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
இப்படி புதிதாக படமெடுக்க வரும் தயாரிப்பாளர் தோற்றுவிடக்கூடாது, அவர்கள் பெரும் தயாரிப்பாளராக வெற்றி பெற்றால் தமிழ் திரைத்துறைக்கு பல வெற்றிப்படங்கள் கிடைக்குமே என்ற சிந்தனையின் விளைவுதான் “ சினிமா தயாரிக்கும் கலை (தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு) “ என்ற புத்தகம். இந்த நூலை ஆம்ஸ்ட்ராங் பிரவின் எழுதியுள்ளார். இவர் தமிழ் திரைத்துறையில் இணை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பணிசெய்துள்ளார். தன் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்த்து புது தயாரிப்பாளர் வெற்றிபெற தேவையான ஆலோசனைகளை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தில் தயாரிப்பாளர் பணிகள் அறிமுகம், படப்பிடிப்புக்கு முன்பான தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு, படபிடிப்புக்கு பின்னான தயாரிப்பு பணிகள் மற்றும் பட வியாபாரம் என நான்கு பெரும் பிரிவுகளில் திரைப்பட தயாரிப்பாளரின் பணிகள் வகைப்படுத்தி எளிமையாக கூறப்பட்டுள்ளது.
ஒரு தயாரிப்பாளர் ஒரு கதையை தேர்வு செய்வது எப்படி, ஒரு இயக்குனரை அடையாளம் காணுவது எப்படி, சரியான தயாரிப்பு நிர்வாகிகளை இனம் காணுவது எப்படி, எந்த செலவுகளில் சிக்கனமாக இருக்க வேண்டும், என்ன மாதிரியான வேலைகளுக்கு கூடுதலாக செலவு செய்யலாம், ஒரு படத்துக்கு உடல் உழைப்பை அதிகம் செலுத்துபவர் யார், ஒரு படத்துக்கு கற்பனாபூர்வமாக வேலை செய்பவர்கள் யார்யார், அவர்களின் பணிகள் எத்தகையது, தயாரிப்பாளர் என்றாலும் பட உருவாக்கத்தின் எந்தெந்த வேலைகளில் தலையிடலாம் எந்தெந்த வேலைகளில் தலையிடக்கூடாது என மிகவும் சிறப்பாக தயாரிப்பாளருக்கு வழிகாட்டியாக இந்த புத்தகம் உள்ளது.
திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்களுக்கு எத்தனை தவணையில் பணம் கொடுக்க வேண்டும், யார்யாரிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும், ஒப்பந்தத்தில் என்ன மாதிரியான விதிகள் இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும், நடிகர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் என்னமாதிரியான தேவைகள் இருக்கும், அதை குறைவான செலவில் நிறைவேற்றுவது எப்படி, இதுபோன்றே இன்னபிற துறை சார்ந்தவர்களின் பணிகள் என்னென்ன அதற்கு எவ்வாறு செலவிடுவது என அனைத்தையும் இப்புத்தகம் விவரிக்கிறது.
கடன் வாங்காமல் படம் தயாரிக்க முடியுமா, கடன் வாங்க வேண்டுமென்றால் எந்த சூழலில் எவ்வளவு கடன் வாங்கலாம், தயாரித்த படத்தை எப்படி, எந்தவகையில் விளம்பரப்படுத்துவது, பிறமொழிகளில் பட உரிமையை விற்பது எப்படி, அதற்கு யாரை அனுகலாம், படத்தை வேறு எந்தெந்த வழிகளில் வியபாரம் செய்யமுடியும் என்பதையெல்லாம் இந்நூல் விரிவாக விளக்குகிறது.
இந்த புத்தகம் அறிமுக தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல அறிமுக இயக்குனருக்கும் உதவியாக இருக்கும். ஒரு நடிகன் தன் நடிப்பு திறமையை மேம்படுத்த நடிப்பு பயிற்சிக்கு செல்வது போல இப்புத்தகம் புது தயாரிப்பாருக்கு ஒரு பயிற்சி கையேடு என்றால் மிகையாகாது. பெரும் தொகையை முதலீடு செய்து படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர் திரைத்துறை சார்ந்து முழுமையாக தெரிந்து கொண்டு படம் எடுத்தால் தன் முதலீட்டை தக்கவைத்து கொள்ள முடியும்,
மொத்த தயாரிப்பு வேலைகளையும் இயக்குனரை நம்பி ஒப்படைத்துவிடும் ஒரு போக்கு தமிழ் திரைத்துறையில் உள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு வேலை குறைவு. ஆனால் சரியான இயக்குனரை தேர்ந்தெடுக்காத பட்சத்தில் தயாரிப்பாளருக்கே பெரும் இழப்பாகும். ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தால் முதலில் தயாரிப்பாளராக தன் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு புது தயாரிப்பாளருக்கு இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகும்.
இந்த புத்தகத்தில் இரண்டு விசயங்கள் எனக்கு குறைகளாக படுகின்றன. ஒன்று அதிகப்படியான ஆங்கில கலப்பு. நடைமுறையில் தமிழில் பயன்படுத்தும் சொற்கள் கூட ஆங்கிலத்தில் உள்ளன. இதை தவிர்த்திருக்கலாம். மற்றொன்று கூறியது கூறல் சொன்ன விசயங்கள் மறுபடியும் மறுபடியும் வருகின்றன. குறிப்பாக தொழில் சார்ந்து எத்தனை தவனையில் பணம் கொடுத்தல் மற்றும் ஒப்பந்தம் போடுதல் போன்ற தகவல்கள் ஒரே மாதிரியே பல இடங்களில் வருகின்றன. இரண்டாவது பதிப்பில் இதெல்லாம் சரி செய்யப்படும் என்று நம்புகிறேன்.
திரைப்படம் சார்ந்து தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வரும் பேசாமொழி பதிப்பகம் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு இந்த ஜனவரி மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

துளி . 277

அச்சச்சோ 
சாதாரண சொல் 
தேவதைகள் 
உச்சரிக்கும்போது மட்டும் 
அடடா 
எத்தனை அழகு...                                                                                                                                                                      17.02.2020.

துளி . 276

பொய்யும்
மெய்யும்
கலந்த 
ஒரு
சொல்
காதல்.                                                                                                                                                                                                                                                                                                                                            15.02.2020.

பதிவு . 31

கடவுளும் சாத்தானும்
ஓஷோப்பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்டு அவரை வாசிக்க ஆவலாக இருந்தேன். தேடிப்பிடித்து
ஓஷோவின் நூல்களை வாசிக்க துவங்கியபோது எனக்கு ஈர்ப்பாக இல்லை. அவ்வப்போது அவரது மேற்கோள்களை பார்க்கும்போது மறுபடியும் வாசிக்க ஆவல் பிறக்கும்.
அப்படியான ஆவலின் காரணமாக அண்மையில் வாசித்த ஓஷோவின் நூல் "நான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல". இந்த நூல் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
கடவுள் பற்றியும் மதம் பற்றியும் ஓஷோவின் உரைகளின் தொகுப்புதான் இந்நூலாகும். சில கட்டுரைகளை வாசிக்கும்போது பெரியாரை வாசிப்பதை போல் உள்ளது. அந்த அளவுக்கு மிக தெளிவாக கடவுள் கருத்தை நிராகரித்துள்ளார். எல்லா மதங்களிலும் கடவுளின் பேரால் மனிதனை ஏமாற்றும் நடைமுறைகள் இருப்பதை ஆதாரங்களோடு பதிவுசெய்துள்ளார்.
அன்பு செய்தலை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்வு எல்லோருக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அதற்கான விதைகள் இந்நூலில் விரவி இருக்கிறது.
இந்நூலை சுவாமி ஆனந்த பரமேஷ் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
இந்நூல் பாரி நிலைய வெளியீடாக ஆகஸ்ட் 1997 ல் ( இரண்டாம் பதிப்பு) வெளிவந்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    10.02.2020.

துளி . 275

தனியாகவே எதிர்கொள்கிறேன்                                                                                    வருடங்கள் தோறும்
காதலர் தினத்தை
புலம்புகிறன்றவனுக்கு பதிலாக
மற்றொருவன் சொன்னான்
உன் விலாசம்
தேடி அலைந்து
கொண்டிருக்கலாம்
உன் தேவதை
கலங்காது காத்திரு
காதலை துணைக்கு வைத்துக்கொண்டு.                                                                                                                                                                                                                                                                                                                             08.02.2020.

துளி . 274

96 <> ஜானு
அவனின்
இருளான உலகினுள்
அவள் 
ஒளியாக வந்தாள்.
அற்புதங்கள் நிகழ
நீண்ட நாட்கள்
தேவையில்லை,
பேரன்பு மிகுந்த
ஓர் இரவு போதும்.                                                                                                                                                                                                                                                                                                                                07.02.2020.

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...