11.30.2017

துளி . 124

பேரன்பை கொடுத்தால்
பதிலாக கிடைக்கிறது
பெரும் துன்பம்.

                               30.11.2017.


துளி . 123

வேறு எந்த 
கெட்ட பழக்கமும் 
கிடையாது  அவனுக்கு
அணு அணுவாய் 
ரசித்து 
ஒரு உயிரை
துடித்துடிக்க
கொல்வதை தவிர...


                                          27.11.2017.

துளி . 122

ஒரு 
மரணம் 
அடையாளம் 
காட்டியது 
பல 
பிணங்களை....


                                 27.11.2017.

துளி . 121

அலைப்பேசி

அனைத்தையும்
அறிந்துகொள்ளலாம்
நாட்டு நடப்பை
நட்புகளின் நடிப்பை
காதலின் துடித்துடிப்பை
காமத்தின் துயரத்தை
நம்முள்ளிருக்கும்
சாத்தானை
நம்முள்ளிருக்கும்
கடவுளை
களித்திருப்போம்
களவாடப்படும்
காலத்தையறியாது...

                                     21.11.2017.

11.20.2017

திரை . 01

                                                      அறம் - அற்புதம்.

சமூக வலைத்தளங்களில் மிக பாராட்டுதலைப் பெற்ற பல படங்களை ஆர்வமாக பார்க்க போய் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அறம் அப்படி இல்லை. மிக அற்புதமான படம்.

மதிவதினியின் துறைசார் விசாரணையில் தொடங்கும்
அறம் படம் கதைக்கு தேவையான வடிவ நேர்த்தியுடன் இருக்கிறது. கதைக்களம், கதைக்கு தேவையான சரியான நடிகர்கள், காட்சிக்கு தேவையான அளவுக்கு சிறப்பான வசனங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றன.

அறம் பேசும் அரசியல் மிகவும் தெளிவாக இருக்கிறது. அரசின் அலட்சியம், அதிகார அமைப்பின் சிக்கல்கள் , இந்த அரசு யாருக்கா செயல்படுகிறது என்பதையெல்லாம் சரியாக பதிவு செய்துள்ளது.

காட்டூர் மக்களின் துயரம், மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தும் உணர்வு பூர்வமாக இப்படத்தில் பதிவாகியுள்ளது.

மகனின் எதிர்காலம் குறித்து புலேந்திரனும் அவன் மனைவியும் பேசிக்கொள்வதை மகன் கேட்டுக்கொண்ருக்கும் போதும், இடைவேளை காட்சியின் போதும், இறுதிக்காட்சியி்ன் போதும் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

இப்படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் கதைக்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.

என் மானசீக குருநாதர்கள் பெயர் பட்டியலில் இயக்குனர் கோபி நயினார் பெயரையும் சேர்த்து கொள்கிறேன்.

துளி . 120

                   அம்மா

உத்வேகம் பெறுகிறேன்
உன் சொற்களில்
பரிசுத்தமாகி போகிறேன்
உன் பார்வையில்
உறங்க செல்லும் முன்பும்
உறங்கி விழித்தப் பின்பும்
நினைத்து கொள்கிறேன்
உன் பேரன்பை.

                                                 16.11.2017.

துளி . 119

                        துரோகம்

எல்லா
தீமைகளிலிருந்தும்
உன்னை காப்பேன் 
என்றவன் தான்
அவளை தீயிட்டு
கொளுத்தினான்
விலகி செல்கிறேன்
உன்னை என்று
அவள் சொன்னதும்...

                                         15.11.2017.

துளி . 118

இன்பத்தின் 
உறைவிடம் 
குழந்தைகள்....

                          14.11.2017.

11.11.2017

துளி . 117

கனமழையிலும் 
கறையாதிருக்கிறது 
உன் நினைவுகள்...

                                   05.11.2017.

துளி . 116

சட்டென பொழியும்
மழையின் சத்தம் 
நினைவூட்டுகிறது 
சட்டென நீயிட்ட 
முத்தத்தின் சத்தத்தை....

                                                 01.11.2017.

11.01.2017

துளி . 115

சூடான தேநீர்
சுகமான உன்
நினைவுகள்
போதுமெனக்கு
இம்மழை நாளில்...

                             30.10.2017.

துளி . 114

நண்பா
வீழ்ச்சி 
இயல்பென்றால் 
எழுச்சியும் 
இயல்புதானே...

                                27.10.2017.

துளி . 113

தேவதையின் 
விலாசம் தேடி 
வந்தவனிடம் 
சொல்கிறான் 
தேவையா வதை...

                                26.10.2017.

துளி . 112

நான்
தீவிர வாசகன்தான் 
என்ன செய்ய
முடிவிலா பக்கங்கள்
கொண்ட மாயப்புத்தகமாய் 
நீ....


                                         25.10.2017.

துளி . 111

எரிந்து 
கருகியது 
மனிதம் 
காசு காசு 
என்றவனால் ...
                        24.10.2017.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...