9.30.2017

துளி .107

வீழ்ந்து துடிக்கிறது
என் இதயம்
வெட்டி செல்கிறது
உன் பார்வை

                                   30.09.2017.

துளி .106

உன்னை விலக்கவும் 
முடியவில்லை
உன்னை நெருங்கவும்
இயலவில்லை

                                   19.09.2017.

துளி .105

எமது இலக்கு
எமது காலடி
தூரத்தில் இல்லை
நெருக்கடிகளையும் தாண்டி
நெடும்தூரம் பயணிக்க
எமக்கு தெரியும்

                                     11.09.2017

பதிவு .05

ஈழத்தில் சிங்கள பவுத்த மத இராணுவத்தினால் நடந்தப்பட்ட தமிழ் இன அழித்தொழிப்புக்கு பிறகான காலத்தில் ஈழ யுத்தகளத்தை பின்புலமாக கொண்டு பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அந்தவரிசையில் சென்ற ஆண்டு வெளிவந்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலும் ஈழ யுத்தத்தைப் பற்றிய படைப்பாக உள்ளது.
இந்த நாவல் இந்திய அமைதிப்படை இலங்கை யில் நுழைந்த காலத்துக்கு சற்றுமுன் தொடங்கி அமைதிப்படை வெளியேறும் காலம் வரையிலான ஈழ தமிழர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளது.
ஒரு காதல் கதை போல் மேலுக்கு தெரிந்தாலும் யுத்தம் மனித வாழ்வை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்குகிறது என்பதை வார்த்தை சிக்கனத்தோடும், வலிமையாக உணரும்வண்ணமும் நுண்மையாக தமிழ்நதி எழுதியுள்ளார்.
அகிம்சையை உலகுக்கு போதித்தவரை தேசதந்தையாக போற்றும் இராணுவம், அமைதியை நிலைநாட்ட சென்றதாக சொல்லப்பட்ட இராணுவம் ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் பற்றியும் இந்நாவல் பேசுகிறது.
போராளிகளின் வளர்ச்சி, சகோதர இயக்கங்களின் சண்டைகள், சாதிய அபிமானங்கள் என அனைத்தையும் இந்நாவல் விவாதிக்கிறது.
இந்நாவலை நற்றிணை பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

                                                                                                               29.09.2017.

9.04.2017

பதிவு . 04

"இரவல் காதலி" நாவலின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த நாவலை வாசிக்க தொடங்கினேன். செல்லமுத்து குப்புசாமிக்கு இது முதல் நாவல் என புத்தகத்தில் உள்ள குறிப்பு சொல்கிறது, நம்பவே  முடியவில்லை.
மென்பொருள் துறை சார்ந்தவர்களின் வாழ்வை பற்றி பேசுகிறது இந்த நாவல். அசோக் பெரியசாமி வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதனூடாக நவீன வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்களையும், ஏமாற்றங்களையும், ஆண் பெண் பாலியல் உறவு சிக்கல்களையும் மிக சிறப்பாக இந்நாவல் பதிவு செய்துள்ளது . இந்த நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிவு . 03

"இனி வரப்போகும் எதிர்கால சந்ததியினர், இவரின் வாழ்க்கையை படித்து விட்டு, இப்படி ஒரு மனிதர், எலும்பும், சதையும், ரத்தமுமாக உண்மையிலேயே மனிதனாக வாழ்ந்திருந்தாரா" என்று ஆச்சரியப் படுவார்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இப்படி சொன்னாராம்.
கார்ல் மார்க்ஸ்-ன் 200-வது பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டபோது காந்தி பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. உழைக்கும் மக்களுக்கா சிந்தித்த ஒரு மனிதர் அடைந்த துயரங்கள் கேட்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
இப்படி ஒரு மனிதர் தன் வாழ்நாள் முழுக்கவும் உலக மானுட மேன்மைக்காவே சிந்தித்துக் கொண்டேயிருந்தார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

துளி.104

எல்லா உண்மைகளையும்
அடையாளம் இல்லாமல்
அழிக்கும் அவர்கள்
மக்களைப் பார்த்து 
சொல்கின்றனர் வீட்டுக்கு 
வெளியே வரும்போது
உண்மையோடு வா...


                                                01.09.2017.

துளி.103

உயிர்கொலை
செய்யேன் என 
உறுதி பூண்டவர்கள் 
மனித இரத்தம் 
குடிக்கிறார்கள்....

                                      31.08.2017.

துளி.102

தொலைந்து 
போகிறேன்
உனது பேரன்பில்....

                               28.08.2017.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...