ஈழத்தில் சிங்கள பவுத்த மத இராணுவத்தினால் நடந்தப்பட்ட தமிழ் இன அழித்தொழிப்புக்கு பிறகான காலத்தில் ஈழ யுத்தகளத்தை பின்புலமாக கொண்டு பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அந்தவரிசையில் சென்ற ஆண்டு வெளிவந்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலும் ஈழ யுத்தத்தைப் பற்றிய படைப்பாக உள்ளது.
இந்த நாவல் இந்திய அமைதிப்படை இலங்கை யில் நுழைந்த காலத்துக்கு சற்றுமுன் தொடங்கி அமைதிப்படை வெளியேறும் காலம் வரையிலான ஈழ தமிழர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளது.
ஒரு காதல் கதை போல் மேலுக்கு தெரிந்தாலும் யுத்தம் மனித வாழ்வை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்குகிறது என்பதை வார்த்தை சிக்கனத்தோடும், வலிமையாக உணரும்வண்ணமும் நுண்மையாக தமிழ்நதி எழுதியுள்ளார்.
அகிம்சையை உலகுக்கு போதித்தவரை தேசதந்தையாக போற்றும் இராணுவம், அமைதியை நிலைநாட்ட சென்றதாக சொல்லப்பட்ட இராணுவம் ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் பற்றியும் இந்நாவல் பேசுகிறது.
போராளிகளின் வளர்ச்சி, சகோதர இயக்கங்களின் சண்டைகள், சாதிய அபிமானங்கள் என அனைத்தையும் இந்நாவல் விவாதிக்கிறது.
இந்நாவலை நற்றிணை பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.
29.09.2017.
29.09.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக