1.31.2019

துளி . 222

குளிர் சாரல் வீசுகிறது
என்றாள் சாருமதி
என் தோள்மீது
சாய்ந்துகொள் என்றேன்
சட்டென திரும்பி
முறைத்து பார்க்கிறாள்
கோபத்தோடு
உறவு முறிந்து
விடுமோ
என்று முழிக்கிறேன்
விழிகளை சிமிட்டி
புன்முறுவலுடன்
விலகி செல்கிறாள்
பின்தொடர்வதா
இல்லை விலகி
செல்வதா குழம்பி
நிற்கிறேன் நான்...

                              31.01.2019

துளி . 221

முற்றுகையிடப்பட்டுள்ளேன்
தேவதையின்
பேரன்பால்...

                                             29.01.2019

துளி . 220



தேவதையின் 
இருப்பிடம் நோக்கி 
செல்லும் ஒற்றையடி 
பாதை இதுதானோ...

                                       28.01.2019

துளி . 219

அகால மரணம்
விரும்ப கூடாததை
விரும்பியதால்
விரைந்து சென்றாயோ
விருப்பமானவர்களை
விட்டு விட்டு...

                                  27.01.2019

பதிவு . 20

திரைக்கதை A-Z
இந்த ஆண்டு திரைப்பட துறை சார்ந்து நான் வாசித்த முதல் புத்தகம் "திரைக்கதை A-Z". இந்நூலாசிரியர்கள் மரியோ ஓ மொரேனோ & அந்தோனி கிரிகோ. இதை தமிழில் தீஷா மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை பேசாமொழி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
திரைக்கதை எழுத வேண்டும் என்று எண்ணியவுடனே எந்த கதையை முதலில் எழுதுவது, எந்த நேரத்தில் எழுதினால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் இருந்து எழுதலாம், நம் எழுத்தை ஊக்கப்படுத்த என்ன செய்ய வேண்டும், திரைக்கதை பாதியில் தடைப்பட்டால் எப்படி சரிசெய்வது, ஒரு பிரபலமான நடிகருக்கான கதையை எப்படி எழுதுவது இப்படி ஏராளமான கேள்விகள் நம்முள் தோன்றும். இவை அனைத்திற்குமான விடை "திரைக்கதை A-Z" புத்தகத்தில் உள்ளது.
திரைக்கதை சார்ந்த 120 தகவல்களை சின்ன சின்ன குறிப்புகளாக கொடுத்துள்ளனர். இடையிடையே தமிழ் பட உதாரணங்களை சிறப்பாக சேர்த்துள்ளனர்.
இவ்வளவு சிறப்பான நூலில் எனக்கு சில மனக்குறைகளும் உள்ளன. அவைகள்...
1.இந்த நூலாசிரியர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களின் திரைப்பட செயல்பாடுகள் என்ன என்பது பற்றி குறிப்புகள் இல்லை.
2. மொழிபெயர்பாளர் குறித்தும் ஏதும் குறிப்பு இல்லை.
3."இந்நூல் பற்றி" என்று மூன்று பக்கங்கள் எழுதியுள்ள குறிப்பை எழுதினது மொழிபெயர்பாளரா இல்லை பதிப்பாளரா தெரியவில்லை.
4.புத்தகத்தை சமர்ப்பித்து கூறும் இடத்தில் தமிழ் ஸ்டியோ அருணுக்கு... இது அவர் பதுபித்த நூல்தானே தனக்குதானே கூறியுள்ளாரா.. இதை எப்படி புரிந்து கொள்வது என குழப்பமாக உள்ளது.
5.சில குறிப்புகளின் முகப்பில் சில விளக்கங்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அது ஏன் .. அப்புறம் AKA என்பதற்கு என்ன விரிவாக்கம்.

                                                                                                                                            27.01.2019

துளி . 218

வெண்மையை 
மேலும் 
வெண்மையாக்க 
பருத்தி வனத்தில் 
வீழ்கிறதோ
வெண்பனி....


                              26.01.2019

துளி . 217

அருகருகேயிருந்து
ஆரத்தழுவி
கொள்ளவதைக்காட்டிலும்
தூர தூரமயிருந்தாலும்
ஆன்மாவின் பரிசுத்த
பேரன்பில் சங்கமிக்கவே
விரும்புகிறேன் நண்பனே...
                                       - சாருமதி

                                          24.01.2019

துளி . 216

நேசமிகு சொற்களை 
தேடி அலைகிறேன்
தொடர்பு எல்லைக்குளியிருந்தும் 
தொடர்பு கொள்ளா முடியா 
துயரை சொல்ல....

                                    24.01.2019

துளி . 215

உடலெங்கும் வலி
மனமெங்கும் ரணம்
நரகத்திலிருந்தாலும்
என் நம்பிக்கையெல்லாம்
எப்போதும் யாராலும்
என் ஆன்மாவை 
அழிக்கமுடியாது என்பதே...
                                  - சாருமதி

                                                 22.01.2019

துளி . 214

என் பேரன்பை
புறம் தள்ளியவர்களின்
வரிசையில் சேர
நீயும் ஏன்
ஆசைப்படுகிறாய் அன்பே...
                                  - சாருமதி

                                                 21.01.2019

துளி . 213

பேரன்பை பொழிந்த
எனக்கு ஏன்
பெரும்துயரை
பரிசளித்தாய் நல்லவனே...
                              - சாருமதி

                                        20.01.2019

துளி . 212

காலை
சந்திர ஒளியில்
மயங்கி வீழ்ந்த
பனித்துளிக்கு தன்
சுடரொளியால் மோட்சம்
தருகிறான் சூரியன்.

                                   19.01.2019

துளி . 211

தேவதையின் 
சந்திப்புக்கு பிறகான 
சிறு பிரிவு ஒன்றில்
என்மீது கவிகிறது
நீண்ட நெடும்காலம் 
தன்னித்தேயிருந்த போதும்
என்மீது கவியாத தனிமை...


                                               16.01.2019

துளி . 210

அவன். 2
பிறருக்கு சந்தோசத்தையே
அள்ளி கொடுப்பதனெ
சங்கல்பம் 
மேற்கொண்டவன் அவன்
எந்நிலையிலும் தன்னால்
எவருக்கம் சங்கடம்
ஏற்படக் கூடாது
என்றும் தீர்மானம்
கொண்டவன் அவன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர் எல்லோரும்
பிழையேதும் செய்யாமலே
பழிசுமந்து வாழ்கிறான் அவன்.

                                                       12.01.2019

துளி . 209

அவன்.1
ஆளரவமற்ற நடுசாமாத்தில்
சீமையோடுகள் வேய்ந்த
வீட்டில் மெல்ல இறங்குகிறது
மார்கழி மாத பனி
தேவதையின் பேரன்பை போல
மின்விசிறி காற்றில்
அலைந்து திரியும்
குளிரை இழுத்தணைத்து
போத்திக்கொண்டு உறங்க
முயல்கிறான் அவன்
கனவிலேனும் தேவதைகள்
வருவார்களா என்ற
ஏக்க பெருமூச்சுடன்
அறையை தங்கள்
இன்னிசையால் அலங்கரிக்க
தொடங்கின கொசுக்கள்

                                              12.01.2019

துளி . 208

திக்குமுக்காடி 
போகிறேன்
தேவதையின்
பேரன்பில்...

                            11.01.2019

துளி . 207

பிறர் உச்சரிக்கையில் 
கோபமூட்டும் சொற்கள்
தேனாய் இனிக்கிறது
தேவதை உச்சரிக்கும்போது...

                                                     09.01.2019

துளி . 206

ஆசையோடு
பார்ப்பவனை
அவதிக்குள்ளாக்குகிறது
தேவதையின்
மேலாடையெங்கும்
பூக்களாக
தியானத்தில் இருக்கும்
புத்தனின் முகம்
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்றவனை
எப்படி எதிர்கொள்ளவான்
அத்தனைக்கு
ஆசைபட சொல்லும்
காலத்தில் வாழ்பவன்

                                   02.01.2019

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...