5.31.2018

பதிவு . 07

கடவுளின் தேசம் எனப்படும் கேரளம் மூன்று விசயங்களில் சிறப்பு வாய்ந்தது. ஒன்று அதிக கல்வியறிவு பெற்ற மக்கள் வாழுமிடம், இரண்டு கலை இலக்கிய தளத்தில் தனக்கென தனித்துவம் வாய்ந்த கலைஞர்கள் வாழ்ந்த, வாழும் மாநிலம், மூன்றாவது சனநாயக முறையில் உலகிலேயே முதல்முதலாக பொதுவுடமைக்கட்சி அதிகாரத்துக்கு வந்தது. முதல் இரண்டு சிறப்புக்கும் மூன்றாவது சிறப்பே அடிப்படையாகும்.
இவ்வளவு அடித்தமுள்ள கேரளாவில் 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் காவல் துறையில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருந்தது என்பதை "வினயா"வின் தன்வரலாற்று நூலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
நான்கு ஐந்து சகோதிரிகளோடு பிறந்த வினயா தன் சொந்த சிந்தனையாலும், முயற்சியாலும் காவல் துறை பணிக்கு வருகிறார். அவரின் பெண்ணுரிமை சார்ந்த சிந்தனையும் செயலும் மற்றவர்களை மிரள செய்கிறது. மிரண்டவர்கள் அவருக்கு எதிராக காய்கள் நகர்த்துகின்றனர். அந்த சதிகளில் அவர் பெற்ற வெற்றிகளை, தோல்விகளை தான் இந்த புத்தகம் சொல்கிறது.
பெண்ணுரிமை சார்ந்த சிந்தனைகளை தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எப்படி பெற்றார் என்பதை வினயா மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார். இவரின் கதையை ஒரு திரைப்படமாக எடுத்தால் அது சிறந்த பெண்ணிய திரைப்படமாக இருக்கும்.
வினயா தன் தலைமுடியை ஆண்களை வெட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும், முடிவெட்டிக்கொண்ட பிறகு சமூகம் அவரை எதிர் கொள்ளும் விதத்தையும் விவரிக்கும்போது நம்மால் வாய்விட்டு சிரிக்காமல் கடக்கமுடியாது. அது உயர்ந்த சிந்தனையும் நகைச்சுவையும்
நிரம்பிய பகுதியாகும்.
குளச்சல் மு.யூசப் மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நேரிடையாக தமிழில் எழுதப்பட்ட து போலவேயுள்ளது. எதிர் வெளியீடு இந்நுலை சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.
                                                                                                                  30.05.2018
Image may contain: make-up

துளி . 168

அவர்கள் மறுபடியும்
நிரூபித்திருக்கிறார்கள்
கொலைகாரர்கள் என்று

மக்களை காப்பேன்
என்று உறுதிமொழி
எடுத்துக்கொண்டு


மக்கள் வரிபணத்தில்
மாதச்சம்பளம்
பெற்றுக்கொண்டு

சட்டத்தின் ஆட்சியை
நிலைநிறுத்துவேன்
என்றவர்கள்தான்

சட்டத்துக்கு புறம்பான
வழிமுறைகளில்
சரியாக குறிபார்த்து
சுட்டுக்கொண்டார்கள்
தம் வாழ்வாதாரம் காக்க
அறவழியில் போராடிய
அப்பாவி மக்களை

சுயநல படுகுழியில்
வீழ்ந்த சுயமோகிகளை
அப்புறப்படுத்தும்
காலம் எக்காலமோ...

                                       22.05.2018

உரையாடல் . 02


நபர் 1 : என்னடா தம்பி நல்லாயிருக்யா ?
நபர் 2 : நல்லாயிருக்கேன்பா.. நீங்க எப்படி இருக்கிங்க..!
நபர் 1 : எனக்கு என்னடா... ஆமா நீ எப்போ கல்யாணம் பண்ண போற இப்டியேயிருந்தா எப்டி..
நபர் 2 : இப்டியே இருக்கலாம்னு பாக்றேம்பா, இதே நல்லாதான்யிருக்கு..
நபர் 1 : அப்டிலாம் சொல்லக்கூடாது, ஒரு வாரிசு வேணாமா..
நபர் 2 : ஆமா .. நா நெறையா சம்பாதிச்சு வச்சுயிருக்கேனா அதுக்கு
நபர் 1 : அப்டி சொல்லாதடா, தெருவுல குடும்பம் நடத்துறவன்கூட கொழந்த குட்டியோட இருக்கிறத நீ பாத்ததில்ல..
நபர் 2 : தெருவுல கெடக்ற நாய்கூட நாலஞ்சு குட்டியோடதான் இருக்கு அதுக்கு என்னப்பா பண்ணறது..
நபர் 1 : உன்கிட்ட பேசியிருக்க கூடாதுன்னு நெனைக்கிறேன்...
நபர் 2 : !!!....???....!!!!

                                                           12.05.2018.

துளி . 167

மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளை
மீட்டிச் செல்லும்
நீண்ட பகல்களை
கொண்ட கோடையிது...

                                               01.05.2018

துளி . 166

உழைப்பாளிகளின்
உழைப்பால் உயரும்
இவ்வுலகம்தான்

உழைப்பாளிகளை
உயரவிடாமல் தடுக்கும்
பொறிமுறையை
உருவாக்குகிறது...


                                            01.05.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...