4.28.2017

துளி .71

மெளனத்தில்
மூழ்கடிக்கிறோம்
முரண்பாடுகளை
எவ்வளவு ஆழத்தில் 
மூழ்க வைத்தாலும்
வெளிவந்து விடுகிறது
பயணிக்க விரும்புகிறோம்
வேறுவேறு திசைகளில்
விலகல் விதிப்படி.....

                                27.04.2017

துளி .70

நான் 
வாசிக்க 
துடிக்கும் 
புத்தகம் 
நீ

                 23.04.2017

4.22.2017

துளி.69

உன் 
விழிகளால் 
விதைக்கிறாய் 
பேரன்பை போலவே 
பெரும் வெறுப்பையும்...

                                          22.04.2017

துளி.68

காய்ந்து போகிறது 
கருணை யெல்லாம் 
கடும் கோடையில்

                                                          19.04.2017

4.14.2017

துளி.67

புத்துணர்வோடு 
தொடங்கியது 
புதிய பயணம் ....

                                  14.04.2017

துளி.66

உனக்கு பிடித்த
சொல் அப்புறம்
எனக்கு பிடித்த
சொல் எப்படி
அப்புறம் எப்படி
பயணிக்க ஒன்றாக ...

                                         12.04.2017

4.11.2017

துளி .65

பூங்காவை சுற்றியுள்ள
சதுர நடை பாதையில்
நடைப்பயிற்சி
அவனை கடந்து 
செல்கின்றனர் சிலர்
அவனும் பலரை
 முந்தி செல்கிறான்
எப்படியோ வந்து
சேர்ந்து விடுகிறது
போட்டி மனப்பான்மை
வாழ்க்கை  சதுரமாக
தெரிகிறது
அவனுக்கு இப்போது

                                                                         08.04.2017

துளி .64

கடும் கோடை
வறண்ட நிலம்
காய்ந்த பயிர்கள்
 கண்ணிலும்
நீரற்ற விவசாயி
நிவாரணம் வேண்டியும்
நீதி வேண்டியும்
மைதானத்தில் நிற்கிறான்
அதிகாரத்தின் பார்வைக்காக
ஆறுதல் கூற வருகின்றனர்
அதிகாரம் ஏதுமற்றோர்
சுய பெருமை பேசவும்
சுய படம் எடுக்கவுமே
நேரம் போதவில்லை
அதிகாரத்துக்கு

                                                                03.04.2017

4.03.2017

துளி .63

சிலருக்கு பிடிக்கும்
திகட்டும் தித்திப்பு
சிலருக்கு பிடிக்கும்
கடும் கசப்பு
எனக்கு பிடிக்கும்
தித்திப்பை போல கசப்பும்

                                                01.04.2017

துளி .62உங்கள் கண்களுக்கு
எப்படி தெரிகிறேனோ  
அப்படியே பாருங்கள் என்னை
என்முகத்துக்கு பொருந்துமென
அணியாதீர்கள் நீங்கள்
விரும்பும் முகமூடியை

                                                    31.03.2017

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...