4.30.2018

துளி . 165

அறுவடை முடிந்து
காய்ந்து நிற்கும்
பருத்தி மிளாறும் 
பற்றிக்கொள்ளுமோ
எனும்படி கொலுத்துகிறது
கோடை வெயில்

வெக்கை தாளாமல்
கருவேலம் மரநிழலில்
நின்று இளைப்பாறும் 
செம்மறியாட்டு மந்தையை
கடந்து செல்கிறது
கிராமத்து பேருந்து 
கொதிக்கும் தார்சாலையில்

சன்னலோரம் அமர்ந்திருந்தாலும்
ஆனந்தமாக இருக்கமுடியவில்லை
வீசும் அனல் காற்றால்
ஆனாலும்
இந்த பயணத்தை 
இனிமையாக்குகிறது
இளையராசாவின்
இன்னிசை பாடல்கள்...

                                      23.04.2018

துளி . 164

உனது அலைபேசியில்
எனது தொடர்பு எண்ணும்

எனது அலைபேசியில்
உனது தொடர்பு எண்ணும்

பதியபட்டுயிருந்தாலும்
நாம் எதிர்பாராமல்

சந்திக்கும் போது 
கேட்டுக்கொள்கிறோம்

ஒருமுறை கூப்படனும்
தோணல இல்ல

மெல்லிய புன்னகையை
படரவிடுகிறோம் நாம்

இயலாமை மறைக்க
கைகுலுக்கியபடியே...

                                        16.04.2018

துளி . 163

ஒளியை நோக்கிய
பயணம் தொடங்குகிறது 
காரிருளின் மையத்திலிருந்து...

                                           13.04.2018

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...