9.30.2019

துளி . 249

சிறு தீண்டல்
சின்னதாக ஒரு முத்தம்
வேறு என்ன வேண்டும்
தீராதுயர் துடைக்க...

                                    29.09.2019

துளி . 248

தூய வெள்ளை
வெளிர் நீலம்
இளம் சிவப்பு
எந்த வண்ண உடையணிந்தாலும்
என்ன வயதானாலும்
என்ன வடிவாக இருந்தாலும்
கருணையை பொழியும்
செவிலியர்கள் எல்லோரும்
எக்காலத்திலும் தேவதைகளே.


                                                             27.09.2019

துளி . 247

கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென 
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.

                                                     27.09.2019.

துளி . 246

அவன் அங்கங்கள்தோரும்
ஆசையோடு முத்தமிடுகிறாள்
மரண தேவதை.

                                                       19.09.2019.

துளி . 245

விவாதிக்க விரும்பாமல் 
வாதிட முற்படும்போது
மிக எளிதாக
நிகழ்ந்து விடுகிறது
விலகுதலும் 
விலக்கப்படுதலும்.


                                      13.09.2019

துளி . 244

சிரிக்கும் ரோசாக்களை
தன் உடையெங்கும் 
படரவிட்ட தேவதை
துயரம் தோய்ந்த 
தன் விழிகளை 
துப்பட்டாவால்
அழித்தி
துடைக்கிறாள்...                                                                                                                                                                                                                                                                                                                                          11.09.2019.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...