9.30.2019

துளி . 247

கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென 
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.

                                                     27.09.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...