4.16.2023

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்கிறார் யாரோ ஒருவர் யாரோ ஒருவருவரின் பேரன்பிற்காக... 07.04.2023.

துளி. 372.

எத்தனை முறை ஏமாற்றபட்டாலும் மறுபடியும் நம்பவே செய்கிறது மானமில்லா மனம். 06.04.2023.

பதிவு. 69.

 பருந்து – அமுதா ஆர்த்தி

அமுதா ஆர்த்தியின் முதல் சிறுகதை தொகுப்பு “பருந்து”. இதில் மொத்தம் 14 சிறுகதைகள் இருக்கின்றன. அம்ருதா , காலச்சுவடு, உயிர் எழுத்து, கனலி, வாசகசாலை, ஆனந்த விகடன், கணையாழி மற்றும் பேசும் புதியசக்தி இதழ்களில் வெளியான கதைகளும், சில நேரடியான கதைகளும் இந்த தொகுப்பில் இருக்கின்றன.
அலுவகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடைய பார்வையில் ஓர் பிச்சைக்காரனின் வாழ்வு, வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக்கொண்ட கணவன் மனைவி ஒரு வீடு வாங்க அல்லாடும் வாழ்வு, கனவுகள் பூக்கும் பதின்பருவ பெண்கள் நால்வர் குளத்துக்கு சென்று நீராடி மகிழ்தல் மற்றும் ஆம்பக்காய் பறிக்க அல்லாடுதல்.
குடிக்குக்கு அடிமையாகி மனைவியை இரவில் அடித்து துரத்தும் கணவனிடம் இருந்து விடுப்பட்டு வாழும் பெண், பெற்றவர்கள் நோய்மையில் அல்லாட அவர்களின் குழந்தை தனிமையில் வாடும் சூழல், தொடந்து ஐந்து நாட்கள் சைக்கிள் சவுட்டும் பெண், பருந்தை வளர்க்க்கு சிறுவன்.
வாடகை வீட்டில் கழிப்பறை இல்லாமல் கழிக்க இடம் தேடி அலையும் ஒருவன், முதுமையிலும் கணவன் மனைவி உறவுச்சிக்கல், திருமணம் செய்து வைக்காமல் மகளின் வருமானத்தில் உயிர் வாழ விரும்பும் அம்மா, தாத்தாவுக்கும் பேத்திக்குமான உறவு.
நாய்க்கும் மனிதர்களுக்குமான உறவு, குளத்தில் கொலுசு தேடி அலையும் சிறுமி என விதவிதமான காதாபாத்திரங்கள் அமுதா ஆர்த்தியின் கதைகளில் ரத்தமும் சதையுமாக உலவுகிறார்கள். இவரின் மொழி எளிமையானது, கதைகள் பெரும்பாலும் நேரடியானது. வாசகனை எளிதில் உள் இழுத்துக்கொள்ளும் வகையிலானது.
இவருடைய கதை விவரணையில் வீடு என்றால் அவற்றை சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி அவற்றை சார்ந்து வரும் பறவைகள், குளம் என்றால் குளத்தில் பூத்திருக்கும் பூக்கள், மீன்கள், பாம்புகள், ஆம்பக்காய், குளத்தில் குளிக்கும்போது விளையாடும் வகைகள், கடல் என்றால் பலவைகயான மீனகள் என இவருடைய கதைகளில் பலவகையான உயிரினங்களும் உலவுகின்றன. மனித வாழ்க்கை என்பது வெறும் மனிதர்களுடன் மட்டும் அல்லவே.
“சிறுகதை மற்றும் நாவல் எழுதும்போது அவற்றில் வரும் மரத்தை பற்றி எழுதும்போது வெறும் மரம் என்று எழுதாமல் அந்த மரத்தின் பெயரை எழுந்துங்கள். வெறும் பூ என்று எழுதாமல் அந்த பூவின் பெயரை எழுந்துங்கள். வெறுமனே பறவை என்று எழுதாமல் அந்த பறவையின் பெயரை குறிப்பிட்டு எழுந்துங்கள்”. என்று சுற்றுசூழலியலாளர் ஒருவர் புனைகதை படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போதுதான் இயற்கை பற்றிய அறிதலை வரும் தலைமுறைக்கு கடத்த முடியும் என்பது அவரது கருத்தாகும். இந்த கருத்துக்கு உதாரணமான கதைகளை அமுதா ஆர்த்தி எழுதியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அமுதா ஆர்த்தியின் பருந்து சிறுகதை தொகுப்பை எதிர் வெளியீடு சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளார்கள். இதன் முதல் பதிப்பு சனவரி 2023-ல் வெளியாகி இருக்கிறது. 06.04.2023.

All react

துளி. 371.

எதிரியை களத்திலிருந்து வெளியேற்றிவிட்டால் வெற்றிபெறுவது எளிதென அவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்கள் அவரை அவையிலிருந்து விலக்கலாம் ஆனால் அவர் மக்கள் மனதில் விதையாக வீழ்வதை தடுக்கமுடியாது. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டென சொன்ன நியூட்டனின் மூன்றாம் விதிப்படி அவரால் அவர்கள் தூக்கிய எறியபடும் காலம் வெகுதொலைவில் இல்லை. 24.03.2023.

துளி. 370.

அன்பே உன் அழைப்புகளை தவறவிடும் போதெல்லாம் தடுமாறித்தான் போகிறேன் பேரன்பின் நற்செய்தியை சொல்ல வந்த அழைப்போவென்று.

- 22.03.2023.

துளி. 369.

வாழ்க்கை

ஒரு உரையாடலில்
மலரும் உறவு
மற்றொரு உரையாடலில்
உதிர்ந்தும் போகலாம். 19.03.2023.

துளி. 368.

நான் கனவுகளில் மிதக்கிறேன் நீ யதார்த்தத்தில் நடக்கிறாய் இருத்தலுக்கும் பறத்தலுக்கும் இடையே வானுக்கும் பூமிக்கான தூரம் தூரத்தை குறைக்கும் முயற்சியில் நாளும் வளர்கிறது நம் காதல். 15.03.2023.

துளி. 367.


பெறுநர் இல்லாமல் காற்றின் திசை எங்கும் மிதந்து செல்கிறது என் காதல்... 15.03.2023.

துளி. 366

பெறுநர் இல்லாமல் காற்றின் திசை எங்கும் மிதந்து செல்கிறது என் காதல்... 10.03.2023.

துளி. 365

சுட்டெரிக்கும் பகலா மர்மம் நிறைந்த இரவா இரவும் பகலும் பிரியும் அந்தியா பனி விழும் அதிகாலையா எந்த கணத்தில் எனை வந்து சேரும் அந்த மந்திர சொல்...

04.03.2023.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...