10.28.2019

துளி . 257

தீரா தாபத்துடன்
என்னை தீண்டுகின்றன
உன் விழிகள்.

                                    24.10.2019

துளி . 256

உன்னை
புரிந்துகொள்ளவே முடியவில்லை
புலம்பும் நண்பனுக்கு
பதிலாக சொன்னேன்
நண்பா
என்னையே என்னால்
புரிந்து கொள்ளமுடியவில்லையே.

                                                                        22.10.2019.

துளி . 255

துப்பட்டாவால் வாயையும்
காதையும் மூடிக்கொண்டு
சன்னகுரலில் அலைபேசியில்
பேச தேவதைகளுக்கு மட்டும்
எப்படி சாத்தியமாகிறது.

                                                         21.10.2019.

துளி . 254

மழைக்கால காலைவேளை
பல மரணவீடுகளை
கடந்து பயணிக்கிறேன்
இன்றைக்கான துன்பம்
இதுபோதும் இயற்கையே...

                                                       21.10.2019.

துளி . 253

உன் உதட்டு
சாயத்துக்கு அடியில்
ஒளிந்திருக்கும் பேரன்பை
சுவைக்க துடிக்குதடி
என் மனம்.

                                                     18.10.2019.

துளி . 252

உன் அன்பின்
அடையாளமாய்
சில நேரம்
உன் வார்த்தைகள்
சில நேரம்
உன் புன்னகை
சில நேரம்
என் உடலில்
உன் உதட்டு
சாயகறை மட்டும்.


                                    17.10.2019.

துளி . 251

வீழ்ந்து மூழ்குகிறேன்
பேரன்பு பொழியும்
உன் விழிகளில்...

                                             17.10.2019.

துளி . 250

என்னுள் இன்பம்
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.


                                    14.10.2019.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...