3.31.2017

துளி.61

இக்கோடையில்
இலைகளாக
உதிர்கின்ற    
என்  கனவுகள்

வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....

                                                31.03.2017

3.29.2017

துளி .60

கரைந்த  கனவுகளை 
நினைவூட்டுகிறது 
இந்த கோடையின் 
நீண்ட பகல் .....

                                                28.03.2017

துளி .59

ஒன்றுமே புரியவில்லை
எனக்கு பிடிக்கவில்லை
நீ எழுதுவது
கவிதையே யில்லை
ஏற்று கொள்கிறேன்
உன் விமர்சனங்களை 
உனக்கு
பிடிக்காத கவிதைகளை
எழுதி எழுதி முடிவில்
நான் எழுதக்கூடும்
உனக்கும் எனக்கும்
பிடித்த கவிதை ஒன்றை

                                                      25.03.2017

துளி .58

ஒற்றை
புள்ளியில் இருந்து
புறப்படும் எண்ணற்ற
கோடுகளில் நாமும் இருவர்
ஒருவரை ஒருவர்
முந்தி செல்லலாம்
நாம்
சற்று தூரம்
சமமாகவே பயணிக்கும்
சாத்தியங்களும் உண்டு
சாத்தியமே இல்லை
நாம்
சந்திக்கவும் சங்கமிக்கவும்.

                                                             25.03.2017

துளி .57

என்னை
வீழ்த்துகிறது
வெயிலின்
வெக்கை

என் மீது
மழை சாரலாய்
விழுகிறது
உன் பார்வை

                                24.03.2017

துளி .56

நம்பிக்கை 
விதைகளை தூவி 
செல்கிறது 
உன் சொற்கள் ...

                                   23.03.2017

துளி .55

கோடை வெயிலாய் 
சுட்டெரிக்கிறது 
உன் நினைவுகள் ...

                                     22.03.2017

3.19.2017

துளி .54

ஊடலுக்கு 
பிறகான 
உரையாடலாய் 
இனிக்கிறது 
இந்த காலை 
பயணம்....


                                     19.03.2017

துளி .53

நன்றி 
சொல்ல விரும்புகிறேன் 
கடவுளுக்கு அல்ல 
பேரன்பு 
மிக்க மனிதர்களுக்கு...

                                        18.03.2017

துளி .52

நான்தான்
தவறு செய்துவிட்டேன்
இருவரும் ஒரேமாதிரி
புலம்புகிறோம்
விலகவும் முடியாமல்
நெருங்கவும் முடியாமல்
இது என்ன வேதனை
எப்போ முடியும் சோதனை.

                                                      17.03.2017

துளி .51

அதீத 
அன்பும் 
அபத்தமானதே ......

                                    17.03.2017

துளி .50


உங்கள் மீது
எவ்வளவு மரியாதை
வைத்திருந்தேன்
நீங்கள் இப்படி 
செய்வீர்கள் என்று
எதிர்பார்க்கவில்லை
எல்லோரையும்  போல
நீங்களும் சராசரி மனிதர்
என நிரூபித்து விட்டீர்கள் 
குற்றப்பத்திரிக்கை வாசித்து
விலகி செல்லும்
நண்பா
ஆசைகளும் நிராசைகளும்
நேசமும் துவேசமும்
பலமும் பலவீனமும்
எல்லாமும் உண்டு என்னிடம்
தப்பு செய்வதும்
மன்னிப்பு கேட்டலும்
இயல்பென வாழும்
சராசரி மனிதன்
நான்
விலகி செல்லும்
நண்பா
எங்கிருந்தாலும்
வாழ்க நலமுடன்

                                         16.03.2017

துளி .49

முழுநிலவு

தேவதைகள்
உறங்கும்
நடு சாமத்தில் 
யாரை தேடி
தனியே
அலைகிறான்
இந்த சந்திரன்....

                                   15.03.2017

துளி .48

இனி
தவறு செய்யமாட்டேன்
சபதம் செய்கிறேன்
ஒவ்வொரு முறையும்
தவறு செய்த பின்பு

                                          14.03.2017

துளி .47

எத்தனை கொலைகள்
மதத்தின் பெயரால்
எத்தனை தற்கொலைகள்
 சாதியின் பெயரால்
சமத்துவம் எப்போது
மானுடத்தின் பெயரால்

                                             14.03.2017

துளி .46

தொடங்குகிறேன்
மறுபடியும்
சுழியத்திலிருந்து ....
பள்ளத்திலிருந்து மேட்டுக்கு 
இருளிலிருந்து ஒளிக்கு
பலவீனத்திலிருந்து பலத்துக்கு ....
தொடர்ந்த பயணம்
தொடரும் பயணம்
தொடர வேண்டிய பயணம் ....

                                               09.03.2017

3.09.2017

துளி .45

விச விதைகளை
 விருப்பமுடன் விதைக்க
துடிக்கும் உன்னை
விலகி செல்வதில் 
தவறு ஏதுமில்லையென
உறுதியாக நம்புகிறேன் ..
உன் விருப்பங்களும்
என் கனவுகளும்
எதிர் எதிரானவை
நான் உண்பதுமில்லை
யாருக்கும்
உண்ணக் கொடுப்பதுமில்லை
விச விதைகளை.

                                 07.03.2017

துளி .44

வெளிப்படையாய்
பேசலாம் என்றாய்
விருப்பத்தை சொன்னால்
விலகி செல்கிறாய் ...
வெளிப்படை
என்பதன் பொருள்
 உன் அகராதியில்
உள் ஒன்று வைத்து
வெளியில்
ஒன்று பேசுவதோ...

                                   06.03.2017

துளி .43

உன்னை பிரிந்து
நீண்ட பயணம்
பொருள் தேடி
கடும் குளிர் 
கடும் வெயில்
 சுடும் பார்வை
சுடும் சொற்கள்
என்னுள் சுழலும்
சுகமான
உன் நினைவுகள்.

                                   04.03.2017

துளி .42

தொலைத்துவிடவே
நினைக்கிறேன் 
உன் நினைவுகளை ....
தொலைக்கமுடியாமல் 
தத்தளிக்கிறேன் 
உன் நினைவுகளோடு ....

                                         04.03.2017

3.02.2017

துளி .41

மாறிக்கொண்டேயுள்ளது
யுத்தக்களம்
எதிரி ஒருவனே
மாறுமா
போர்முறை
தற்காப்பிலிருந்து ...

                                                 02.03.2017

துளி .40

எனக்கு வேண்டாம்
 உன் அனுதாபங்கள்
உன் ஆறுதல்
வார்த்தைகளும் வேண்டாம்
என் கைகள் உள்ளன
என் கண்ணீர் துடைக்க
யாசித்து பெறும் பொருளல்ல
அன்பு

                                                     01.03.2017

துளி .39

நீயும் நானும்
ஒரே பருவம்
நீயும் நானும்
வாழ்வது 
ஒரே நகரம்
நாம் சந்திக்கும்போது
சங்கமிக்க முடியாத
சங்கடங்கள்
சங்கடம் நீங்குமா
சங்கமம் நிகழுமா
யாரறிவார்
காலத்தின் கணக்கை .....

                                          28.02.2017

துளி .38

உறக்கம் தொலைத்த
இரவு ஒன்றில் வந்தது
உன் நினைவு...
.
எவ்வளவு தடைகள் வந்தாலும் 
காலம்தோறும் ஒன்றாகவே
பயணிப்போம் என்றாய் ....
தடம் மாறி பயணிக்கும்
இத்தருணத்திலும்
 இனிமையாகவே இருக்கிறது
உன் நினைவுகள் ....
உறக்கம் தொலைய காரணம்
உன் நினைவுகளாகவும் இருக்கலாம் ...

                                                               27.02.2017

துளி .37

எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....

                                 25.02.2017

துளி .36

ஊடலுக்கு பிறகான 
சமாதானத்துக்கு
ஈடான
இன்பம் வேறுயில்லை
இவ்வுலகில் ...

                                    24.02.2017.

துளி .35

இரவும் பகலும்
சங்கமிக்கும் தருணம்
வாகனம் குறைவான தெரு
நடந்தது வருகிறோம் எதிரெதிரே
கடந்து செல்கிறோம்
பார்க்காதது போல்
ஒருவரை ஒருவர்
பார்த்தபடியே ...

                                          24.02.2017

துளி .34

பள்ளி படிப்பை
பாதியில் நிறுத்திய
தோழியின் மகள் திருமணத்தில்
தேடி அலைகிறான் அவன்
தனக்கொரு மணப்பெண் தேடி ....

                                                 21.02.2017.

துளி .33

நடக்கும் நாடகத்தில்
எனக்கான வசனத்தையும்
அவர்களே பேசிவிட்டால்
நான் என்ன செய்ய....

                                        18.02.2017.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...