முறிந்த பாலம் - தோர்ன்டன் ஒயில்டெர்.
தமிழில் - ரா.நடராசன்.
சமூக ஊடகங்களில் பயன்கள் பல. அவற்றில் ஒன்று சில நல்ல புத்தகங்ககளின் அறிமுகம் கிடைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள் குறித்து பேசிய உரை ஒன்றில்தான் "முறிந்த பாலம்" நாவலின் கதை சுருக்கத்தை கேட்டேன். அதைக்
கேட்டதும் இந்த நாவலை படிக்க வேண்டும் என ஆவல் எனக்குள் உருவாகியது.
சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு பெரு நாட்டில் தாவர வேர்களால் உருவாக்கப்பட்ட பாலம் ஒன்று அறுந்து விழுந்தது. அப்போது அதில் பயணம் செய்த ஐவர் உயிர் இழந்தனர். இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
இறந்து போனவர்களின் வாழ்வைப்பற்றி ஒரு பாதிரியார் ஆய்வு செய்கிறார். அந்த ஐந்து பேரும் அன்பைப்பற்றி ஒரு புரிதலுக்கு வந்தநிலையில் மரணம் அவர்களை தழுவியது. கடவுள் ஏன் அவர்களை காப்பற்றவில்லை என்ற நோக்கில் பாதிரியின் ஆய்வு நீள்கிறது. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தாந்தேடி கண்டைந்த தகவல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட மதச்சபை அவருக்கு மரணதண்டனை விதிக்கிறது.
பாதிரியார் காப்பாற்றபட்டாரா இல்லையா..?!
கதையின் முடிவில் இறந்து போனவர்களின் உறவினர்கள் மூவர் சந்திக்கிறார்கள். இவர்கள் சந்திப்பின் நோக்கம் என்ன..?! என்பதோடு நாவல் நிறைவு பெறுகிறது.
இந்த நாவலை தேசாந்திரி பதிப்பகம் சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை ரா.நடராசன் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்த புத்தகத்தில் அவரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. முதன்முதலில் தமிழில் எந்த ஆண்டு மொழிபெயர்ப்பு செய்தார்கள். தென்மொழி புத்தக டிரஸ்டின் ஆதரவில் இந்த புத்தகம் வெளியானதாக முன்னுரையில் ராஜமன்னார் குறிப்பிடுகிறார்.அந்த புத்தக டிரஸ்ட் பற்றியும் இந்த புத்தகத்தில் குறிப்பு இல்லை. இந்த தகவல்களை சேர்த்து புதிதாக ஒரு பதிப்புரை எழுதி இருக்கலாம்.
இந்த நாவலை படிக்க தூண்டுதலாக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
14.05.2023.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக