4.30.2018

துளி . 165

அறுவடை முடிந்து
காய்ந்து நிற்கும்
பருத்தி மிளாறும் 
பற்றிக்கொள்ளுமோ
எனும்படி கொலுத்துகிறது
கோடை வெயில்

வெக்கை தாளாமல்
கருவேலம் மரநிழலில்
நின்று இளைப்பாறும் 
செம்மறியாட்டு மந்தையை
கடந்து செல்கிறது
கிராமத்து பேருந்து 
கொதிக்கும் தார்சாலையில்

சன்னலோரம் அமர்ந்திருந்தாலும்
ஆனந்தமாக இருக்கமுடியவில்லை
வீசும் அனல் காற்றால்
ஆனாலும்
இந்த பயணத்தை 
இனிமையாக்குகிறது
இளையராசாவின்
இன்னிசை பாடல்கள்...

                                      23.04.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...