5.31.2018

பதிவு . 07

கடவுளின் தேசம் எனப்படும் கேரளம் மூன்று விசயங்களில் சிறப்பு வாய்ந்தது. ஒன்று அதிக கல்வியறிவு பெற்ற மக்கள் வாழுமிடம், இரண்டு கலை இலக்கிய தளத்தில் தனக்கென தனித்துவம் வாய்ந்த கலைஞர்கள் வாழ்ந்த, வாழும் மாநிலம், மூன்றாவது சனநாயக முறையில் உலகிலேயே முதல்முதலாக பொதுவுடமைக்கட்சி அதிகாரத்துக்கு வந்தது. முதல் இரண்டு சிறப்புக்கும் மூன்றாவது சிறப்பே அடிப்படையாகும்.
இவ்வளவு அடித்தமுள்ள கேரளாவில் 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் காவல் துறையில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருந்தது என்பதை "வினயா"வின் தன்வரலாற்று நூலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
நான்கு ஐந்து சகோதிரிகளோடு பிறந்த வினயா தன் சொந்த சிந்தனையாலும், முயற்சியாலும் காவல் துறை பணிக்கு வருகிறார். அவரின் பெண்ணுரிமை சார்ந்த சிந்தனையும் செயலும் மற்றவர்களை மிரள செய்கிறது. மிரண்டவர்கள் அவருக்கு எதிராக காய்கள் நகர்த்துகின்றனர். அந்த சதிகளில் அவர் பெற்ற வெற்றிகளை, தோல்விகளை தான் இந்த புத்தகம் சொல்கிறது.
பெண்ணுரிமை சார்ந்த சிந்தனைகளை தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எப்படி பெற்றார் என்பதை வினயா மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார். இவரின் கதையை ஒரு திரைப்படமாக எடுத்தால் அது சிறந்த பெண்ணிய திரைப்படமாக இருக்கும்.
வினயா தன் தலைமுடியை ஆண்களை வெட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும், முடிவெட்டிக்கொண்ட பிறகு சமூகம் அவரை எதிர் கொள்ளும் விதத்தையும் விவரிக்கும்போது நம்மால் வாய்விட்டு சிரிக்காமல் கடக்கமுடியாது. அது உயர்ந்த சிந்தனையும் நகைச்சுவையும்
நிரம்பிய பகுதியாகும்.
குளச்சல் மு.யூசப் மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நேரிடையாக தமிழில் எழுதப்பட்ட து போலவேயுள்ளது. எதிர் வெளியீடு இந்நுலை சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.
                                                                                                                  30.05.2018
Image may contain: make-up

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...