1.31.2019

பதிவு . 20

திரைக்கதை A-Z
இந்த ஆண்டு திரைப்பட துறை சார்ந்து நான் வாசித்த முதல் புத்தகம் "திரைக்கதை A-Z". இந்நூலாசிரியர்கள் மரியோ ஓ மொரேனோ & அந்தோனி கிரிகோ. இதை தமிழில் தீஷா மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை பேசாமொழி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
திரைக்கதை எழுத வேண்டும் என்று எண்ணியவுடனே எந்த கதையை முதலில் எழுதுவது, எந்த நேரத்தில் எழுதினால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் இருந்து எழுதலாம், நம் எழுத்தை ஊக்கப்படுத்த என்ன செய்ய வேண்டும், திரைக்கதை பாதியில் தடைப்பட்டால் எப்படி சரிசெய்வது, ஒரு பிரபலமான நடிகருக்கான கதையை எப்படி எழுதுவது இப்படி ஏராளமான கேள்விகள் நம்முள் தோன்றும். இவை அனைத்திற்குமான விடை "திரைக்கதை A-Z" புத்தகத்தில் உள்ளது.
திரைக்கதை சார்ந்த 120 தகவல்களை சின்ன சின்ன குறிப்புகளாக கொடுத்துள்ளனர். இடையிடையே தமிழ் பட உதாரணங்களை சிறப்பாக சேர்த்துள்ளனர்.
இவ்வளவு சிறப்பான நூலில் எனக்கு சில மனக்குறைகளும் உள்ளன. அவைகள்...
1.இந்த நூலாசிரியர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களின் திரைப்பட செயல்பாடுகள் என்ன என்பது பற்றி குறிப்புகள் இல்லை.
2. மொழிபெயர்பாளர் குறித்தும் ஏதும் குறிப்பு இல்லை.
3."இந்நூல் பற்றி" என்று மூன்று பக்கங்கள் எழுதியுள்ள குறிப்பை எழுதினது மொழிபெயர்பாளரா இல்லை பதிப்பாளரா தெரியவில்லை.
4.புத்தகத்தை சமர்ப்பித்து கூறும் இடத்தில் தமிழ் ஸ்டியோ அருணுக்கு... இது அவர் பதுபித்த நூல்தானே தனக்குதானே கூறியுள்ளாரா.. இதை எப்படி புரிந்து கொள்வது என குழப்பமாக உள்ளது.
5.சில குறிப்புகளின் முகப்பில் சில விளக்கங்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அது ஏன் .. அப்புறம் AKA என்பதற்கு என்ன விரிவாக்கம்.

                                                                                                                                            27.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரைப்படங்கள் 2022.

  2022 - நான் பார்த்த படங்கள்.   01.      சனவரி : Intolerable Cruelty – Joel coen. 02.      The worst person in the world – Joachim T...