3.30.2020

பதிவு . 30

ஞாயிறு கடை உண்டு – கீரனூர் ஜாகிர்ராஜா
பிரபஞ்சன் நினைவு பரிசு போட்டியில் பரிசு வாங்கிய மற்றொரு நாவலான கீரனூர் ஜாகிர்ராஜாவின் ஞாயிறு கடை உண்டு நாவலை இன்று வாசித்து முடித்தேன். கீரனூர் ஜாகிர்ராஜா பெயரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவரோட எந்த படைப்பையும் வாசித்ததாக நினைவு இல்லை. நான் வாசித்த அவரோட முதல் நாவல் இதுதான். நாவலை வாசித்து முடித்ததும் அடடா இவ்வளவு நாளாக இவரை வாசிக்காமல் விட்டுவிடோமே என எனக்கு வருத்தமாக இருக்கிறது. இனிவரும் நாட்களில் அவருடைய மற்ற படைப்புகளை தேடி வாசிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
தஞ்சை நகரம் வரலாற்று சிறப்பு மிக்கது. எல்லாவகையான அரசியல் சிந்தனைகளும் வலம்வரும் நிலபரப்பு. பல நவீன இலக்கியகர்த்தாக்கள் இப்பகுதியில் தோன்றியுள்ளனர். பழமையும் புதுமையும் மிகுந்த பகுதி. இந்த நகரத்தின் மையமான கீழவாசல், ராவுத்தாபாளையம் மற்றும் காந்திஜி சாலை ஆகிய பகுதிகளை பின்புலமாக கொண்டு முறையே மீன்சந்தை தொழிலாளர்கள், தவணைக்கடையில் வேலைசெய்யும் குழுவினர் மற்றும் ஜவுளிக்கடை ஊழியர்கள் என இந்த மூன்று தரப்பு அடித்தட்டு மக்களின் வாழ்வை கீரனூர் ஜாகீர்ராஜா எளிமையான மொழியில் ஆனால் மிகவும் சிறப்பாக பதிவுசெய்துள்ளார்.
ஞாயிறு கடை உண்டு நாவலின் சொல்வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருகிறது. கதாபாத்திரம் கதையை சொல்லிக்கொண்டு வரும்போதே இடைவெட்டாக்க கதைசொல்லி உள்ளே வந்து கூடுதலானா ஆனால் தேவையான அளவுக்கு விபரங்களை சொல்லிவிட்டு விலகி சென்று விடுகிறார். நாவலின் மற்றொரு சிறப்பனா அம்சமாக நகைச்சுவையை சொல்லலாம். இந்த நாவலை வாசிக்கும்போது பல இடங்களில் வாய்விட்டு சிரித்து இருக்கிறேன். கொஞ்ச நேரம் வாசிப்பே நின்றுவிடும். சிரிக்கமட்டுமல்ல நாவலில் சிந்திக்கவும் நிறைய இடங்கள் உண்டு. கண்ணீர் முட்டும் இடமும் உண்டு. குறிப்பாக பெண்களின் உடல் உப்பதையை முன்வைத்து ஒரு பக்கம் உண்டு. அந்த துயரம் நவீன வாழ்வின் சாபம் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்நாவலை Discovery Book Palace சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல் இந்த நாவலை வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர்Jega Deesan S - க்கு என் மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        11.01.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...