3.30.2020

பதிவு . 31

கடவுளும் சாத்தானும்
ஓஷோப்பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்டு அவரை வாசிக்க ஆவலாக இருந்தேன். தேடிப்பிடித்து
ஓஷோவின் நூல்களை வாசிக்க துவங்கியபோது எனக்கு ஈர்ப்பாக இல்லை. அவ்வப்போது அவரது மேற்கோள்களை பார்க்கும்போது மறுபடியும் வாசிக்க ஆவல் பிறக்கும்.
அப்படியான ஆவலின் காரணமாக அண்மையில் வாசித்த ஓஷோவின் நூல் "நான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல". இந்த நூல் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
கடவுள் பற்றியும் மதம் பற்றியும் ஓஷோவின் உரைகளின் தொகுப்புதான் இந்நூலாகும். சில கட்டுரைகளை வாசிக்கும்போது பெரியாரை வாசிப்பதை போல் உள்ளது. அந்த அளவுக்கு மிக தெளிவாக கடவுள் கருத்தை நிராகரித்துள்ளார். எல்லா மதங்களிலும் கடவுளின் பேரால் மனிதனை ஏமாற்றும் நடைமுறைகள் இருப்பதை ஆதாரங்களோடு பதிவுசெய்துள்ளார்.
அன்பு செய்தலை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்வு எல்லோருக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அதற்கான விதைகள் இந்நூலில் விரவி இருக்கிறது.
இந்நூலை சுவாமி ஆனந்த பரமேஷ் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
இந்நூல் பாரி நிலைய வெளியீடாக ஆகஸ்ட் 1997 ல் ( இரண்டாம் பதிப்பு) வெளிவந்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    10.02.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...