6.28.2019

துளி . 236

அவள்
படிக்கும் வயதில்
அவளுக்கு
வழிக்காட்ட யாருமில்லை
படித்து முடித்து வேலைக்கு
அலைந்த காலங்களிலும் யாரும்
அவளுக்கு முன்வந்து உதவவில்லை
பருவங்கள் பல கடந்தும் காத்திருந்தாள்
ஒரு காவிய காதலுக்காக
காலம் நீரைப்போல காணாமல் போனது
எல்லாம் ஏமாற்றமாய் முடிந்த தருணமொன்றில்
பால்யத்தில் கைவிட்ட கனவுகளிலொன்றை
மீண்டும் கண்டெடுத்தாள் அவள்
கனவுகள் இன்னும் தேவைக்கான
காசுகளை சம்பாதிக்கவில்லை
அவளும் சோர்ந்து போகவில்லை
விரும்பிய இலக்கை நோக்கிய
பயணத்தில் இன்னும் வீழாதிருப்பதே
பேரானந்தம்தான் அவளுக்கு மட்டும்
எக்காலத்திலும் எவ்வகையிலும் அவளுக்கு
உதவாதவர்கள் அவளுக்காக பாரம் சுமப்பதாக இன்று பாவனை செய்கின்றனர்
அவளின் தெளிவு அவர்களை குழப்புகிறது
அவர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்
அவளின் அவமானத்தை காண்பதற்காக
அனுபவ அறிவால்
அறியாமையின் இருளை
ஒளியாக்கி பயணிக்கிறாள் அவள்.
-சாருமதி                                                                                                                                                                                                                                                                                                                                                                                  13.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...