4.30.2020

பதிவு . 36

குதுப்பி - ம.காமுத்துரை. 
திருமணங்கள், சீமந்தம், காதுகுத்து, அன்னதானங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள் என இன்னும் நிறைய நிகழ்வுக்களுக்கு செல்கிறோம், அங்கு சாப்பிடுகிறோம். அந்த உணவை தயாரித்த சமையல் கலைஞர்கள் மற்றும் அந்த தொழிலாளர்கள் பற்றி என்றாவது நாம் நினைத்துப்பார்த்ததுண்டா, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்வுமுறைதான் என்ன என்று எண்ணிப்பார்க்கத்தான் நமக்கு நேரமிருக்கிறதா.... இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக தமிழில் ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரபஞ்சன் நினைவு பரிசுப்போட்டி(2019)-யில் பரிசு வாங்கிய நாவல்களில் ஒன்றான ம.காமுத்துரையின் குதுப்பி நாவல் அது.
தென் மாவட்டங்களில் ஒன்றான தேனியின் அல்லிநகரம் பகுதியை இந்நாவல் கதைக்களமாக கொண்டுள்ளது. அந்த பகுதியில் வீட்டு விசேசங்களுக்கு சமையல் வேலை செய்யும் தொழிலாளர்களை கதாப்பாத்திரங்களாகக்கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அந்த எளிய மனிதர்களின் அசலான வாழ்வை எந்த மிகையுமில்லாமல் ரத்தமும் சதையுமாக ம.காமுத்துரை எழுதியுள்ளார்.
அந்த தொழிலாளர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தை, துரோகத்தை, துக்கிரித்தனத்தை, ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும்அருமையாக, எளிமையான மொழியில் நம் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியுள்ளார்.
குதிப்பி நாவலை இரண்டு வார கால அவகாசத்தில் இன்றுதான் வாசித்து முடித்தேன். இந்த நாவலாசிரியரின் படைப்புகளை இதற்கு முன்பு வாசித்ததில்லை. இந்த நாவலாசிரியரின் பிற படைப்புகள் பற்றியும் நாவலாசிரியரின் வாழ்க்கை குறிப்பும் இந்த நாவலில் இல்லை. அது இருந்திருக்கலாம்.
இந்நாவலை Discovery Book Palace சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல் இந்த நாவலை வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர்Jega Deesan S-க்கு என் மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          10.04.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...