1.31.2023

திரை. 14

 பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொடுமையான முறையில் கொலை செய்து சாக்கடையிலும் புதைக்குழியிலும் வீசுகிறான் கொடுரூரன் ஒருவன்.

அவனிடம் கடைசியாக சிக்கி சீரழிந்த பெண்தான் இக்கதையின் கதைச்சொல்லி. மாய யதார்த்தவாத முறையில் கொலை செய்யபட்டவளே தன் கதையை நமக்கு சொல்கிறாள்.
அந்த இளம் பெண்ணின் இல்லை குழந்தையின் கதை, அவளது குடும்பத்தின் கதை, அந்த கொடூரனால் கொலை செய்யப்பட்ட பெண்களின் கதை கடைசியாக அந்த கொடூரனின் கதை என எல்லாவற்றையும் சொல்லுகிறாள்.
சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் இயற்கையின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று நம்பிக்கை ஊட்டுகிறது இப்படம்.
இப்படத்தில் இயக்குனர் வன்முறையை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் வியப்பளிக்கிறது. அவ்வளவு மேன்மையான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறார். 31.01.2023.
May be an image of 2 people, people standing, outdoors and text
All reactio

பதிவு. 66

 தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள் – பாவெல் சக்தி.

பத்திரிக்கையாளர் ஞாநி நடத்திய கேணி சந்திப்பில் இயக்குனர் பாலுமகேந்திரா "எழுத்தும் சினிமாவும்" என்ற தலைப்பில் உரையாற்றிய போது இப்படி சொன்னார்:
“எல்லா கலை வடிவங்களிலும் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று உருவம்(Pattern). மற்றது உள்ளடக்கம்(Concept). இயற்கையும் காதலும் காலம் காலமாக கலை வடிவங்களில் சொல்லப் பட்டுக்கொண்டே வருகிறது. புதிதாக வரும் படைப்பாளி அதை எப்படி சொல்கிறான் என்பதில்தான் கவனம் செலுத்துகிறான். அப்படி புதிதாக சொல்லுவதுதான் அவனது பலமாக இருக்கிறது. அதுவே நவீனமாகவும் இருக்கிறது.”
பாவெல் சக்தியின் “தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்” கதைகளை படித்ததும் எனக்கு பாலுமகேந்திரா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. இதிலுருக்கும் எட்டுக்கதைகளும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. இவருடைய எழுத்துக்களை இதற்கு முன் படித்தது இல்லை. அந்தவகையிலும் இந்த படைப்பாளி எனக்கு புதியவர்தான்.
காவல்நிலையத்தில் கொலைகள் நடக்கும்போது அதுப்பற்றி எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஊடகங்களில் விலாவாரியாக செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். இப்படி எல்லாருக்கும் தெரிந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதை கதையாக எழுந்தும்போது படைப்பாளிக்கு இருக்கும் சவால் மிகப்பெரியது. அந்த சவாலை மிக எளிதாக பாவெல் எதிர்கொள்கிறார். மனிதனால் மனித உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எழுத்தில் கொண்டு வருவது சாதாரணமில்லை. ஆனால் பாவெல் அதை மிக சாதாரணமாக நிகழ்த்தி விடுகிறார்.
இந்த புத்தகத்தில் மூன்று குறுநாவல்களும் ஐந்து சிறுகதைகளும் இருக்கின்றன. “அஞ்சனம்மாளும் அந்த ரெண்டு எழுத்தும்” என்ற குறுநாவல் தமிழின் முதன்மையான குறுநாவல்களில் ஒன்றாகும். அந்த கதை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அது சொல்லப்பட்ட விதம் மிகவும் புதுமையானது. சாதியும் அதிகாரமும் ஒரு எளிய மனிதனை என்ன பாடுபடுத்துகிறது என்பதற்கான ஆவணமாக இருக்கிறது.
எட்டுக்கதைகளும் நேர்கோட்டில் சொல்லபடவில்லை. அதனால் என்ன எவ்வளோ கதைகளை நேர்கோட்டில்தானே படித்தோம். இந்த கதைகளில் இருக்கும் எந்த மனிதர்களின் வாழ்வு நேர்கோட்டில் இருக்கிறது. எல்லாரும் சிக்கல்களுக்குள்தானே வாழ்கிறோம்.
கொரோனா காலத்தில் எத்தனை எத்தனை அனர்த்தங்கள் நிகழ்ந்தன. நீதிக்காக காத்திருந்தவரின் நிலை என்ன, இரவுதோறும் புதிய வாடிக்கையாளரின் வருகையால் வாழ்ந்த பாலியல் தொழிலாளியின் நிலை என்ன, சுயம் இழந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார், கொடும் துயரையும் பணமாக்கிய காவல்துறையினரை மருத்து துறையினரை என்ன செய்வது.
உறவுகளை இழந்தவர்களும் உறவுகளே இல்லாதவர்களும், பணம் நிறைந்தவர்களும் பணமே இல்லாதவர்களும் என எல்லோரும் இந்த கதைகளில் ரத்தமும் சதையுமா உலவுகிறார்கள்.
நீதிமன்ற வளாகம், காவல்நிலைய வளாகம் அது சார்ந்த தகவல்களும் இக்கதைகளில் நிறைய இருக்கிறது. அந்த துறை சார்ந்தவர்களே பெரும்பாலன கதைகளில் கதை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள்.
பாவெல் சக்தி எதைப்பற்றி எழுதினாலும் அதை நம்முன் காட்சியாக நிறுத்தி விடுகிறார். அவரிடம் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதை எளிமையாகவும் அதே சமயம் அதன் வீரியம் குறையாமல் சொல்லிவிடுகிறார். திரைப்படங்களில் வருவதுபோல் மிக எளிதாக ப்ளாஷ் பேக்(flashback) உத்தியை கையாண்டு கதை சொல்கிறார்.
இந்த புத்தகத்தை எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.
இதன் முதல் பதிப்பு சனவரி 2022 ஆண்டில் வெளியாகியுள்ளது. 27.01.2023.

All rea

துளி. 360.

பழைய புகைப்படம்

எதையோ தேடும்பொழுது
எதிர்பாராமல் கிடைத்தது
அந்த புகைப்படம்
காலம் பல கடந்தும்
என்னோடு பயணித்துள்ளது
எனக்கு தெரியாமலே
என் வாழ்வைப் போல்
அழகை பேரழகாக
மாற்றி இருக்கிறது காலம்.. 25.01.2023.

துளி. 359.

எதை நினைத்து வானத்தை நோக்கி தியானிக்கின்றன இந்த இரட்டை பனைமரங்கள். 16.01.2023.

துளி . 358

பேரிருளை விலக்க வந்த பேரொளி நீ.. 15.01.2023.

துளி . 357

பேறிருள் சூழும் பொழுது துணுக்குறாமல் தூண்டி விடு ஒளிந்திருக்கும் பேரன்பின் சுடரை.. 06.01.2023.

துளி . 356

உன்னை நான் கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன்,

நீ சென்ற தடத்தில்
நான் சென்றுவிட கூடாது என்பதற்காக. 05.01.2023.

துளி : 355

கணங்கள் தோறும் மாறும் இவ்வுலகில் மாறா அன்புடன் காலம் கடந்தும் காத்திருக்கிறேன் பேரன்பே உனக்காக... 04.01.2023.

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....