1.31.2023

பதிவு. 66

 தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள் – பாவெல் சக்தி.

பத்திரிக்கையாளர் ஞாநி நடத்திய கேணி சந்திப்பில் இயக்குனர் பாலுமகேந்திரா "எழுத்தும் சினிமாவும்" என்ற தலைப்பில் உரையாற்றிய போது இப்படி சொன்னார்:
“எல்லா கலை வடிவங்களிலும் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று உருவம்(Pattern). மற்றது உள்ளடக்கம்(Concept). இயற்கையும் காதலும் காலம் காலமாக கலை வடிவங்களில் சொல்லப் பட்டுக்கொண்டே வருகிறது. புதிதாக வரும் படைப்பாளி அதை எப்படி சொல்கிறான் என்பதில்தான் கவனம் செலுத்துகிறான். அப்படி புதிதாக சொல்லுவதுதான் அவனது பலமாக இருக்கிறது. அதுவே நவீனமாகவும் இருக்கிறது.”
பாவெல் சக்தியின் “தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்” கதைகளை படித்ததும் எனக்கு பாலுமகேந்திரா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. இதிலுருக்கும் எட்டுக்கதைகளும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. இவருடைய எழுத்துக்களை இதற்கு முன் படித்தது இல்லை. அந்தவகையிலும் இந்த படைப்பாளி எனக்கு புதியவர்தான்.
காவல்நிலையத்தில் கொலைகள் நடக்கும்போது அதுப்பற்றி எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஊடகங்களில் விலாவாரியாக செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். இப்படி எல்லாருக்கும் தெரிந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதை கதையாக எழுந்தும்போது படைப்பாளிக்கு இருக்கும் சவால் மிகப்பெரியது. அந்த சவாலை மிக எளிதாக பாவெல் எதிர்கொள்கிறார். மனிதனால் மனித உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எழுத்தில் கொண்டு வருவது சாதாரணமில்லை. ஆனால் பாவெல் அதை மிக சாதாரணமாக நிகழ்த்தி விடுகிறார்.
இந்த புத்தகத்தில் மூன்று குறுநாவல்களும் ஐந்து சிறுகதைகளும் இருக்கின்றன. “அஞ்சனம்மாளும் அந்த ரெண்டு எழுத்தும்” என்ற குறுநாவல் தமிழின் முதன்மையான குறுநாவல்களில் ஒன்றாகும். அந்த கதை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அது சொல்லப்பட்ட விதம் மிகவும் புதுமையானது. சாதியும் அதிகாரமும் ஒரு எளிய மனிதனை என்ன பாடுபடுத்துகிறது என்பதற்கான ஆவணமாக இருக்கிறது.
எட்டுக்கதைகளும் நேர்கோட்டில் சொல்லபடவில்லை. அதனால் என்ன எவ்வளோ கதைகளை நேர்கோட்டில்தானே படித்தோம். இந்த கதைகளில் இருக்கும் எந்த மனிதர்களின் வாழ்வு நேர்கோட்டில் இருக்கிறது. எல்லாரும் சிக்கல்களுக்குள்தானே வாழ்கிறோம்.
கொரோனா காலத்தில் எத்தனை எத்தனை அனர்த்தங்கள் நிகழ்ந்தன. நீதிக்காக காத்திருந்தவரின் நிலை என்ன, இரவுதோறும் புதிய வாடிக்கையாளரின் வருகையால் வாழ்ந்த பாலியல் தொழிலாளியின் நிலை என்ன, சுயம் இழந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார், கொடும் துயரையும் பணமாக்கிய காவல்துறையினரை மருத்து துறையினரை என்ன செய்வது.
உறவுகளை இழந்தவர்களும் உறவுகளே இல்லாதவர்களும், பணம் நிறைந்தவர்களும் பணமே இல்லாதவர்களும் என எல்லோரும் இந்த கதைகளில் ரத்தமும் சதையுமா உலவுகிறார்கள்.
நீதிமன்ற வளாகம், காவல்நிலைய வளாகம் அது சார்ந்த தகவல்களும் இக்கதைகளில் நிறைய இருக்கிறது. அந்த துறை சார்ந்தவர்களே பெரும்பாலன கதைகளில் கதை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள்.
பாவெல் சக்தி எதைப்பற்றி எழுதினாலும் அதை நம்முன் காட்சியாக நிறுத்தி விடுகிறார். அவரிடம் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதை எளிமையாகவும் அதே சமயம் அதன் வீரியம் குறையாமல் சொல்லிவிடுகிறார். திரைப்படங்களில் வருவதுபோல் மிக எளிதாக ப்ளாஷ் பேக்(flashback) உத்தியை கையாண்டு கதை சொல்கிறார்.
இந்த புத்தகத்தை எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.
இதன் முதல் பதிப்பு சனவரி 2022 ஆண்டில் வெளியாகியுள்ளது. 27.01.2023.

All rea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...