7.31.2018

துளி . 180

தேவதையின் மெல்லிய
புன்னகையை போல
சிறு மழைத்துளியை
தூவி செல்கிறது
அந்தி வானம்...

                               26.07.2018

வரி . 06

எவ்வளவு துயரங்கள் சூழ்ந்த போதிலும் 
மனிதன் வாழவே எத்தனிக்கிறான்.

                                                              20.07.2018

துளி . 179

பெருத்த
அவமானத்திற்கு
பின்னும்
உன்னை
பின்தொடர்கிறேன்
அன்பே
உனது
பேரன்பிற்காக
மட்டும் ....

                               17.07.2018

துளி . 178

கடைசியாக யாரிடுவது 
போட்டியில் நீள்கிறது
முத்த யுத்தம்...

                                     06.07.2018

துளி . 177

கனவு
கனவில்
மேற்கு பார்த்த
வாசல் படியேறி 
என் வீட்டின்
உள்ளே செல்கிறேன்
அம்மா என அழைத்தபடி
நிசத்தில் என்
வீட்டு வாசல்
தெற்கு திசை
நோக்கியுள்ளது...
தெற்கு வடக்காக
நீண்டு கிடக்கும்
எங்கள் தெருவில்
மேற்புறமாக மின்சார
கம்பங்கள் உள்ளன
கனவில்
கிழக்கு திசையில்
இருக்கிறது ஒளிதரும்
அந்த கல் மரங்கள்
ஒளியூட்டும் தேவதை
உனை நோக்கி
வரப்போகிறாள்
கனவுக்கு ஆருடம்
சொல்கிறார் நண்பர்
காதிருக்கிறேன்
கடும் கோடைக்கு
பின் வரும்
கார்காலத்திற்காக...

                                           05.07.2018

வரி . 05

நீ சந்தோசமாக இருக்கும் எந்தவொரு கணமும், 
மற்றவருக்கு துயரம் தராமலிருந்தால் 
அதுவே உண்மையான மகிழ்ச்சியாகும்.

                                                                       02.07.2018

வரி . 04

வாசிக்காத நாளெல்லாம் 
வாழாத நாளேயாகும்.

                                              01.07.2018

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....