7.31.2018

துளி . 177

கனவு
கனவில்
மேற்கு பார்த்த
வாசல் படியேறி 
என் வீட்டின்
உள்ளே செல்கிறேன்
அம்மா என அழைத்தபடி
நிசத்தில் என்
வீட்டு வாசல்
தெற்கு திசை
நோக்கியுள்ளது...
தெற்கு வடக்காக
நீண்டு கிடக்கும்
எங்கள் தெருவில்
மேற்புறமாக மின்சார
கம்பங்கள் உள்ளன
கனவில்
கிழக்கு திசையில்
இருக்கிறது ஒளிதரும்
அந்த கல் மரங்கள்
ஒளியூட்டும் தேவதை
உனை நோக்கி
வரப்போகிறாள்
கனவுக்கு ஆருடம்
சொல்கிறார் நண்பர்
காதிருக்கிறேன்
கடும் கோடைக்கு
பின் வரும்
கார்காலத்திற்காக...

                                           05.07.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...