சா.ரு.மணிவில்லன்.
9.30.2019
துளி . 249
சிறு தீண்டல்
சின்னதாக ஒரு முத்தம்
வேறு என்ன வேண்டும்
தீராதுயர் துடைக்க...
29.09.2019
துளி . 248
தூய வெள்ளை
வெளிர் நீலம்
இளம் சிவப்பு
எந்த வண்ண உடையணிந்தாலும்
என்ன வயதானாலும்
என்ன வடிவாக இருந்தாலும்
கருணையை பொழியும்
செவிலியர்கள் எல்லோரும்
எக்காலத்திலும் தேவதைகளே.
27.09.2019
துளி . 247
கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.
27.09.2019.
துளி . 246
அவன் அங்கங்கள்தோரும்
ஆசையோடு முத்தமிடுகிறாள்
மரண தேவதை.
19.09.2019.
துளி . 245
விவாதிக்க விரும்பாமல்
வாதிட முற்படும்போது
மிக எளிதாக
நிகழ்ந்து விடுகிறது
விலகுதலும்
விலக்கப்படுதலும்.
13.09.2019
துளி . 244
சிரிக்கும் ரோசாக்களை
தன் உடையெங்கும்
படரவிட்ட தேவதை
துயரம் தோய்ந்த
தன் விழிகளை
துப்பட்டாவால்
அழித்தி
துடைக்கிறாள்... 11.09.2019.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துளி. 402
எல்லாவற்றையும் சரியாக செய்ய நினைத்து பிழைகளுடனே செய்து முடிக்கிறேன். 23.03.2025
துளி . 117
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
பதிவு. 72.
முறிந்த பாலம் - தோர்ன்டன் ஒயில்டெர். தமிழில் - ரா.நடராசன். சமூக ஊடகங்களில் பயன்கள் பல. அவற்றில் ஒன்று சில நல்ல புத்தகங்ககளின் அறிமுகம் கிட...
சிறுகதை.1 ( மயக்கம்)
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இர...