இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
/ ஆ.மாதவன்.
ஒன்றினை
அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை அழித்து எதனை
உருவாக்குகிறோம் என்பதில்தான் மானுட மேன்மைகளும் கீழ்மைகளும் வெளிப்படுகின்றன. இதை
சொல்லவே எல்லா கலைப்படைப்புகளும் முயல்கின்றன. மகாபாரத கதையில் இது வீரியமாக வெளிப்பட்டு
இருக்கிறது.
காலமாற்றத்தினால்
கருத்து மாற்றமும் ஏற்படுகிறது. ஒரு புறம் போர் வீரத்தின் அடையாளம் என்றால் மற்றொரு
புறம் அது மானுடத்திற்கு எதிரானது. போர் என்றால் அழிவுதான். மகாபரத கதையிலும் அழிவுதான்.
அதுவும் பேரழிவு.
நவீன
எழுத்தாளர்கள் மகாபாரத கதையை மறு உருவாக்கம் செய்து நாவல்கள் எழுதியுள்ளார்கள். தமிழ்
மொழியில் சிலர் எழுதியதையும் மலையாளம், கன்னடம், குஜராத்தி மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட
மகாபரதம் சார்ந்த பல படைப்புகளை படித்து இருக்கிறேன். இதில் பெரும்பாலும் பாண்டவர்கள்
போரில் வெல்ல வேண்டும் என்ற அவ நம்முள் தோன்றிவிடும். பேரழிவுக்கு பிறகு வெற்றி வாகை
சூடிய அவர்களின் மனநிலை என்ன என்பது நமக்கு தெரியாது. சில படைப்புகளில் சிறு கோடிட்டு
காட்டியிருப்பார்கள்.
மலையாள
எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டும்” நாவல் தொடங்கும் இடமே பாண்டவர்கள்
வெற்றிவாகை சூடியபின் அறியணை ஏற இருக்கும் தருணம்தான். அதிலும் குறிப்பாக தருமன், திரெளபதி மற்றும் குந்தியின்
நினைவுகள் ஊடாக கர்ணனின் வாழ்வையும் சாவையும், போர்களத்தின் பேரழிவையும் பற்றி பேசுகிறார்.
மாபெரும்
வெற்றியை ஈட்டியவர்கள் மாபெரும் இன்பத்தை அனுபவிப்பதற்கு பதிலாக மாபெரும் துன்பத்தில்
வீழ்கிறார்கள். ஏனெனில் போரினால் ஏற்பட்ட துன்பம் அளவிடமுடியாதது. இந்த நாவலை படித்து
முடிக்கும்போது மனம் எந்த வகையிலான போரினையும் வெறுக்க ஆரம்பிக்கிறது.
கதாபாத்திரங்களின்
நினைவுகளை காட்சிப்பூர்வமான விவரணை செய்து எழுதியுள்ளார். மிகவும் கவனமான படிக்க வேண்டிய
படைப்பாக இருக்கிறது.
ஆ.மாதவன் சிறப்பாக மொழிப்பெயர்த்து உள்ளார். மத்திய அரசு நிறுவனமான சாகித்திய அகாதெமி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
30.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக