மேற்கு தொடர்ச்சி மலை - தமிழ் பெருமிதம்
''மேற்குத் தொடர்ச்சிமலை" திரைப்படம் தமிழ் பெருமிதங்களில் ஒன்றாகிவிட்டது. அந்த மலையோர மக்களின் வாழ்வை உண்மையாக பதிவு செய்துள்ள இயக்குனர் லெனின் பாரதி பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
இருளை,பசுமையை,வரட்சியை, மழையை, வயோதிகர்களின் பேரழகை என அனைத்தையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
காட்சியின் உணர்களை மேலும் வீரியமிக்கதாக மாற்ற இளைராசாவின் பின்னணி பேருதவியாக இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் என்னுள் பேரமைதியை உணர்ந்தேன்.
இது புயலுக்கு பின்வரும் அமையில்லை அல்லது இது இயலாமையினால் ஏற்பட்டதுமல்ல.
இது புயலுக்கு பின்வரும் அமையில்லை அல்லது இது இயலாமையினால் ஏற்பட்டதுமல்ல.
ஏன் இப்படி நடக்கிறது, இதை தடுக்க முடியாதா, இதற்கெல்லாம் யார்யார் காரணம், மனித வாழ்வை சூறையாடிதான் மாறுதல் வருமா, அப்படியானால் கடவுளின் நிலையென்ன,கோட்பாடுகளின் கதியென்னா, என்னவாகும் மானுடரின் எதிர்காலம் என்று முடிவில்லா கேள்விகளை என்னுள் எழுப்புகிறது இத்திரைப்படம்.
25.08.2018.
25.08.2018.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக