சில திரைப்படங்கள் நாவலை போல இருக்கின்றன. சில நாவல்கள் திரைப்படத்தை போல இருக்கின்றன. இப்படி தோன்ற காரணம் அண்மையில் நான் வாசித்த இருபது வெள்ளைக்காரர்கள் என்ற புத்தகம். இது மூன்று குறுநாவல்களின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் Ayyanar Viswanath. இவருடைய எழுத்தை இப்போதுதான் முதன் முறையாக வாசிக்கிறேன்.
பழி – வன்முறையை தேர்வாகா கொண்டவர்களின் வாழ்க்கை முறையை அல்லது வாழ்க்கை கதை அதன் அனைத்து பரிமாணத்தோடும் (காதல்,காமம்,ரத்தம்) மிகவும் விறுவிறுப்பான முறையில் சொல்லி செல்கிறார். அவரின் சொல்முறையில் நம்முள் ஒரு திரைப்படம் ஒடத் தொடங்கி விடுகிறது. இது உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தில் மிகவும் அபூர்வமான பதிவாகும்.
மழைக்காலம் – கடந்த பத்து வருடங்களில் ஆண் பெண் உறவில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு துணுக்கை இக்கதையில் காணலாம். அண்மை காலத்தில் நான் வாசித்த மிகசிறந்த காதல் கதை இதுவாகும். மிகவும் சுவராசியமான காதலும் காமமும் கலந்த நவீன வாழ்வின் பதிவாகும்.
இருபது வெள்ளைக்காரர்கள் – வாழ்க்கை கொண்டாட்டமானது. சில தருணங்களில் மிகவும் குரூரமானது. அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ நேர்ந்தவனின் கதையாகும் இது. இந்த கதையில் விரியும் நிலக்காட்சிகள் பிரமிப்பை தருகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து மிகவும் எளிமையாகவும் சுவராசியமானதாகவும் இருக்கிறது. அதேசமயம் வாழ்வின் வலிகளையும் பதிவுசெய்கிறது.
இந்த நூலை வம்சி பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2011 ஆண்டு வெளிவந்துள்ளது.
இந்த நூலை எனக்கு அறிமுகபடுத்தியதோடு அதை வாசிக்கும் வாய்ப்பையையும் ஏற்படுத்தி தந்த நண்பர் Jega Deesan S எனது மனமார்ந்த நன்றிகள். 14.08.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக