8.31.2019

பதிவு . 26

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் வாசித்து முடித்த புத்தகம் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ.
இந்த நாவலின் ஆரம்பத்தில் ஆண்களும் பெண்களும் அவர்களின் கனவுகளின் உச்சத்தில் மிதக்கின்றனர். கூடவே நாமும் மிதக்குபடியாகவே அய்யனார் மிகவும் சுவாரசியமான மொழியில் எழுதி செல்கிறார்.
குறிப்பாக மூன்று ஆண்கள், மூன்று பெண்களின் கதையும் காலம் மாறி மாறி முன்பு பின்னாக எழுதி சென்றாலும் நமக்கு குழப்பமில்லாமல் தெளிவாக கதையை சொல்லி முடிக்கிறார்.
முதலில் மாயமாக தோன்றிய வாழ்வு பிறகு எப்படி மண்ணோடு மண்ணாக பொருந்தி போகிறது என்ற வியப்பு இன்னும் என்னுள் இருந்து கொண்டேயிருக்கிறது.
ஓரிதழ்ப்பூக்கான விளக்கம் சிறப்பானது, அதை நீங்கள் வாசித்து உணர வேண்டும்.
இந்த நாவலை சிறப்பான அட்டை படத்தோடு கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதல் பதிப்பு வெளியான 2017 ஆகும்.
இந்த நாவலை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நண்பர் ஜெகதீஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              23.08.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...