முதல் காதல் - இவான் துர்கனேவ்
எல்லா மனிதர்களுக்கும் முதல் முதலில் புதிதாக ஒன்றை அனுபவிக்கும்போது தோன்றும் இன்பம் பேரின்பமாகத்தான் இருக்கும். அப்படித்தான் பதின்ம பருவத்தில் தோன்றும் காதலுக்கும் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
உலகின் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் தொடர்ந்து எழுத்தப்பட்டு வரும் கருப்பொருள் காதல். அதுவும் ஒரு ஆணோக்கோ அல்லது பெண்ணுக்கோ முதன் முதலில் தோன்றும் காதல் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது.
இவான் துர்கனேஷ் எழுதிய “முதல் காதல்” என்ற குறுநாவல் ஒரு ஆணுக்கு ஏற்பட்ட முதல் காதல் அனுபவத்தையே சொல்கிறது. பதினாறு வயதில் தன்னைவிட சில வயது மூத்த பெண் மீது அவனுக்கு ஏற்பட்ட காதலையும் அதனால் அவன் மனதுக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்து செல்கிறது இந்த நாவல். அதே சமயம் அந்த இளம்பெண்ணின் மனவோட்டங்களையும் நமக்குள் கடத்துகிறது.
அந்த காலத்தில் ரஷ்ய வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது. ஆண் பெண் உறவுகள் எப்படி இருந்தது. பணம் படைத்தவர்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், பணம் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, குறிப்பாக இளம் தலைமுறைக்கு தன் முந்தைய தலைமுறையின் இலக்கியம் குறித்து இருந்த கருத்துகள் என்ன என்பதையெல்லாம் இந்த குறுநாவல் தொட்டு செல்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக