அண்மையில் வாசித்து முடித்த நாவல்
இரா.முருகவேளின் " மிளிர் கல் ". அதைப்பற்றிய மிக சுருக்கமாக சில குறிப்புகள்.
இரா.முருகவேளின் " மிளிர் கல் ". அதைப்பற்றிய மிக சுருக்கமாக சில குறிப்புகள்.
நாவலின் கதைநாயகியான முல்லை கண்ணகி பற்றி ஆவணப்படம் எடுக்க டெல்லியிலிருந்து சென்னை வருகிறாள்.
கண்ணகி பிறந்த கடற்கரை நகரான பூம்புகார் தொடங்கி, கண்ணகி நடந்து சென்ற வழிதடம் வழியே அவள் மறைந்த மலை மகுதி வரை பயணம் செய்கிறாள். அதை ஆவணப் படமாகவும் எடுக்கவும் செய்கிறாள்.
ஒரு வகையில் இந்நாவலில் சிலப்பதிகாரம் மறுவாசிப்பு செய்யப்படுகிறது.
கண்ணகியின் பிம்பம் மறுபடியும் மறுபடியும் தமிழ் சமூகத்தில் நினைவுகூறப்படுகிறது. கண்ணகி பத்தினி தெய்வம் என்று சிலரும், கண்ணகி அதிகாரதத்தின் முன்னின்று உண்மை பேசினால் என்று சிலரும் கொண்டாடுகின்றனர். இன்னும் சிலர் கணவனை கேள்வி கேட்காமல் இருந்ததாலேயே இந்த ஆணாதிக்க சமூகம் அவளை கொண்டாடுகிறது என்றும் கூறுகின்றனர். ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக அல்லது அறத்தின் பிரதிநிதியாக கண்ணகியை கொள்ள முடியுமா...?
மொழி, வாணிபம், அரசியல், மிளிர் கல் ( மாணிக்கம், மரகதம், கோமேதகம் ) பற்றி தமிழ் இலக்கியத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது, சமகாலத்தில் அதன் வகிபாகம் என்ன போன்ற விசயங்களும் விவாதிக்கப்படுகிறது.
ஒரு பயண அனுபவத்தை இந்த நாவல் தருகிறது.
23.04.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக