ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "நிலவறைக் குறிப்புகள் " நாவலை வாசித்தேன். பல உளவியல் நூல்கள் வாசித்து தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகளை இந்த நாவல் ஒரேயொரு பிரதான கதாப்பாத்திரம் வாயிலாக மனித உளவியல் பற்றி காத்திரமாக பதிவு செய்துள்ளது.
சுமார் இருநூறு பக்கங்கள் மட்டுமேயுள்ள இந்தநாவலில் பொருளும்,அன்பும்,அதிகாரமும் அற்ற ஓர் எளிய மனிதனின் ஒற்றை குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயுள்ளது. ஒருவன் கண்ணாடி முன் நிற்கும்போது அவன் உடலில் உள்ள அழகு,அசிங்கம் அவனுக்கு தெரிவதுபோல் இந்நாவல் மானுடத்தின் உளவியலை பிரதிப்பலிக்கிறது.
நாவலை எம்.ஏ.சுசீலா சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நேரிடையாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிக்கும் அனுபவத்தை தருகிறது.
நற்றிணை பதிப்பகம் கிளாசிக் உலக நாவல் வரிசையில் இந்நாவலை சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
29.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக