வதந்தி
இணையத்தில் வெளிந்துள்ள வதந்தி தொடர் பார்த்தேன். இது எட்டு பகுதிகளாக இருக்கிறது. முதல் பகுதியின் முதல் காட்சியில் ஒரு இளம்பெண் கொலையுண்டு கிடக்கிறாள். அவள் யார், அவளை கொன்றது யார், ஏன் கொன்றார்கள் எல்லா கேள்விகளுக்குமான பதில்தான் மற்ற பகுதிகள். குறிப்பாக கொன்றது யார் என்பது எட்டாவது பகுதியின் முடிவில்தான் தெரிகிறது. அதுவரைக்கும் பார்க்க தூண்டும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
கொலையுண்ட இளம் பெண்ணின் வாழ்வு அழுத்தமாக எழுதப்பட்டு அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் அம்மா, அவளுடைய நண்பர்கள், அவளுடைய கொலையில் தொடர்பு இருக்குமோ என சந்தேக வலையத்திற்குள் வரும் நபர்கள் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வும் அவர்களுடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது. கன்னியாக்குமரி பகுதியின் வட்டார வழக்கு வசீகரம் செய்கிறது.
பல கதாபாத்திரங்களின் கதை பார்வையாளனை திசை திருப்ப மட்டுமே பயன்படும் விதத்தில் எழுதியிருப்பது இந்தொடரின் பலவீனமாக இருக்கிறது. விலங்கு, சுழல் வரிசையில் வதந்தியும் சேர்கிறது. 12.02.2023.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக