12.31.2024

பதிவு. 86

 புனைவு என்னும் புதிர் / உலகச் சிறுகதைகள்-2

விமலாதித்த மாமல்லன்.
விமலாதித்த மாமல்லனின் புனைவு என்னும் புதிர் புத்தக வரிசையில் இது நான்காவது புத்தகம். முதல் இரண்டும் உள்ளூர் சிறுகதைகள் குறித்தது. அடுத்த இரண்டும் உலகச் சிறுகதைகள் குறித்ததாகும்.
இந்த புத்தகத்தில் பன்னிரெண்டு சிறுகதைகளும் (ரேமண்ட் கார்வார், பீட்டர் ஹாக்ஸ், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ், சாதத் ஹாசன் மண்டோ, பீட்டர் பிஷெல், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், விளாதிமிர் நபகோவ், ஜாக் ஸ்டெய்ன்பெக் மற்றும் அகஸ்டோ மாண்டெரோஸா ஆகியோரின் படைப்புகள்) அவற்றிற்கான கட்டுரையும் இருக்கின்றது.
ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட்டு இருக்கிறது, எதனால் இது சிறப்பான இலக்கிய படைப்பாக இருக்கிறது என்பதை மிகவும் எளிமையாக விமலாதித்த மாமல்லன் விளக்கி செல்கிறார். அப்படி அவர் ஒவ்வொரு கதைகுறித்து விளக்கும்போதும் அது ஒரு சிறுகதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பாடமாக மாறிவிடுகிறது. இதுவே இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.
இந்த புத்தகத்தினை “சத்ரபதி வெளியீடு” பதிப்பகம் வெளிட்டுள்ளது.

25.12.2024.

All reaction

அனுபவம்.02

 இன்று காலை நவம்பர் மாத காலச்சுவடு இதழில் வெளியான ஒரு சிறுகதையும் ஒரு கட்டுரையும் படித்தேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணங்களின் சிறு குறிப்பே இப்பதிவாகும்.

முதலில் சுஜா செல்லப்பன் எழுதிய "அகலாது அணையாது" சிறுகதையை படித்தேன். கதையின் தலைப்பு என்னை ஈர்க்கவில்லை என்றாலும் முதல் வரியிலேயே கதையை தொடங்கிய விதம் எனக்கு பிடித்து இருந்தது. கதையை படித்த பிறகு இந்த தலைப்பு கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்தேன்.
நவீன கால இளம் பெண், அவள் அணியும் உடை சார்ந்து, அவள் அடையும் மன சங்கடங்களே கதையின் கருவாகும். அதை தொடங்கிய விதமும் வளர்த்து சென்ற வழிமுறையும் சிறப்பாக இருக்கிறது. மனதின் ஆசைகளையும் சங்கடங்களையும் மிக எளிமையாகவும் அழகாகவும் எழுதி சென்றவர் கதையினை முடித்த விதம் எனக்கு உவப்பாக இல்லை. கதை சட்டென பாதியில் முடிந்த உணர்வையே தருகிறது.
அடுத்து கட்டுரை, லாவண்யா சுந்தராஜனின் 'அதே ஆற்றில்" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கார்த்திக் ராமசந்திரன் பேசிய உரையே "உறைந்த காலத்தில் சந்தித்தல்" என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. இந்த தலைப்பே பலகதைகளை சொல்லும் கவித்துவ வரியாக இருக்கிறது.
கா.ரா உரையின் தொடக்கத்தில் இந்த தொகுப்பு எட்டு இரட்டை சிறுகதைகள் அடங்கியது என்கிறார். அதென்ன இரட்டைச் சிறுகதை என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிக்கிறேன்.
அடுத்து இந்த உரையில் கிரேக்க தத்துவ அறிஞர் ஹெரக்லிடஸின் " ஒருவர் இரண்டாம் முறை அதே ஆற்றில் இறங்க இயலாது. ஏனெனில் இரண்டாம் முறை அவரும் நதியும் அதே தன்மையுடன் இருப்பதில்லை" என்ற மேற்கோளை குறிப்பிடுகிறார். எனக்கு சட்டென வேறு ஒரு நினைவு வருகிறது. இன்னும் கூடுதலாக கட்டுரையின் இல்லை உரையின் மீதான ஆர்வம் கூடுகிறது.
"நீ வலது காலை வைக்கும்போது இருந்த நதி, இடது காலை வைக்கும்போது இருப்பதில்லை" என புத்தர் சொன்னதாக படித்துள்ளேன். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை வியந்தபடி தொடர்ந்தேன்.
புராண மற்றும் தொன்ம கதைகளை மறு ஆக்கம் செய்தவர்கள் அதை எப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நான்கு வகைமாதிரிகளை சொல்லி, அவற்றில் லாவண்யா சுந்தராஜனின் சிறுகதைகள் எந்த வகைமைக்குள் வருகின்றன, அவற்றின் சிறப்புகள் என்ன, போதாமைகள் என்ன என எல்லாவற்றையும் சிறப்பாக கூறி உரை முடிக்கிறார்.
வரும் புத்தக கண்காட்சியில் வாங்க புத்தகங்கள் பட்டியலில் இந்த சிறுகதை தொகுப்பையும் சேர்த்து கொள்கிறேன்.
இந்த நாளை இனிமையாக்கிய சிறுகதை ஆசிரியர் சுஜா செல்லப்பனுக்கும் கட்டுரையாளர் கார்த்திக் ராமசந்திரன் இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

06.12.2024

May be an image of 3 people, clarinet and text that says "காலச்சிவடு 299 கவம்பர் 2024 024 .6 60 Ndume:s.ad206 Volume 6 Issue: 11 இதழ் SAS தலித்துகளும் தலித்துகளும்பதுவிலக்கும் ளும் மதுவிலக்கும் அஞ்சவி ராபர்ட் கிரப் ஜி.னன்.சாய்பாபா ஜീ. த.எே. சாய்பாபா கதை எம். கோபாலகிருஷ்ணன் மனோஜ் தாஸ் சுஜா செல்லப்பன் ஹான் காஸ் நோபல் இலக்கியப் பரிசு 2024"
All reac
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Face

11.30.2024

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

 

இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.

 

ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை அழித்து எதனை உருவாக்குகிறோம் என்பதில்தான் மானுட மேன்மைகளும் கீழ்மைகளும் வெளிப்படுகின்றன. இதை சொல்லவே எல்லா கலைப்படைப்புகளும் முயல்கின்றன. மகாபாரத கதையில் இது வீரியமாக வெளிப்பட்டு இருக்கிறது.

 

காலமாற்றத்தினால் கருத்து மாற்றமும் ஏற்படுகிறது. ஒரு புறம் போர் வீரத்தின் அடையாளம் என்றால் மற்றொரு புறம் அது மானுடத்திற்கு எதிரானது. போர் என்றால் அழிவுதான். மகாபரத கதையிலும் அழிவுதான். அதுவும் பேரழிவு.

 

நவீன எழுத்தாளர்கள் மகாபாரத கதையை மறு உருவாக்கம் செய்து நாவல்கள் எழுதியுள்ளார்கள். தமிழ் மொழியில் சிலர் எழுதியதையும் மலையாளம், கன்னடம், குஜராத்தி மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட மகாபரதம் சார்ந்த பல படைப்புகளை படித்து இருக்கிறேன். இதில் பெரும்பாலும் பாண்டவர்கள் போரில் வெல்ல வேண்டும் என்ற அவ நம்முள் தோன்றிவிடும். பேரழிவுக்கு பிறகு வெற்றி வாகை சூடிய அவர்களின் மனநிலை என்ன என்பது நமக்கு தெரியாது. சில படைப்புகளில் சிறு கோடிட்டு காட்டியிருப்பார்கள்.

 

மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டும்” நாவல் தொடங்கும் இடமே பாண்டவர்கள் வெற்றிவாகை சூடியபின் அறியணை ஏற இருக்கும் தருணம்தான்.  அதிலும் குறிப்பாக தருமன், திரெளபதி மற்றும் குந்தியின் நினைவுகள் ஊடாக கர்ணனின் வாழ்வையும் சாவையும், போர்களத்தின் பேரழிவையும் பற்றி பேசுகிறார்.

 

மாபெரும் வெற்றியை ஈட்டியவர்கள் மாபெரும் இன்பத்தை அனுபவிப்பதற்கு பதிலாக மாபெரும் துன்பத்தில் வீழ்கிறார்கள். ஏனெனில் போரினால் ஏற்பட்ட துன்பம் அளவிடமுடியாதது. இந்த நாவலை படித்து முடிக்கும்போது மனம் எந்த வகையிலான போரினையும் வெறுக்க ஆரம்பிக்கிறது.

 

கதாபாத்திரங்களின் நினைவுகளை காட்சிப்பூர்வமான விவரணை செய்து எழுதியுள்ளார். மிகவும் கவனமான படிக்க வேண்டிய படைப்பாக இருக்கிறது.  

 

ஆ.மாதவன் சிறப்பாக மொழிப்பெயர்த்து உள்ளார். மத்திய அரசு நிறுவனமான சாகித்திய அகாதெமி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.                                                                         



30.11.2024



 

 

 

துளி. 398

மரணம் சிலருக்கு தனிமையிலிருந்து சிலருக்கு நோய்மையிலிருந்து சிலருக்கு முதுமையிலிருந்து சிலருக்கு உடல் பிரச்சனைகளிலிருந்து சிலருக்கு மன சங்கடங்களிலிருந்து மிக சிலருக்கு இவை எல்லாவற்றிடமிருந்தும் விடுதலை. 19.11.2024.

பதிவு. 84 (புனைவு என்னும் புதிர் - உலக சிறுகதைகள் - 1)

 புனைவு என்னும் புதிர்

உலக சிறுகதைகள் - 1
விமலாதித்த மாமல்லன் / ஆர்.சிவக்குமார்.
இந்த தொகுப்பில் 15 உலக சிறுகதைகள் இருக்கிறது. பல்வேறு மொழிகளை சார்ந்த கதைகள். இதனை ஆங்கிலம் வழியாக ஆர்.சிவக்குமார் மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
விமலாதித்த மாமல்லன் இந்த சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அந்த படைப்பு எதனால் சிறந்த படைப்பாக இருக்கிறது என்பதை எல்லா வகை வாசகரும் புரிந்து கொள்ளும் விதமாக மிகவும் எளிமையாக விளக்கி கூறியுள்ளார்.
ஒரு காதாபாத்திரம் பயன்படுத்தும் உடை, அது உலவும் இடம், அது செய்யும் செயல் இவையெல்லாம் அந்த படைப்பில் தரும் பொருள் என்ன என்பதை விமலாதித்த மாமல்லன் விளக்கியுள்ள விதம் ஒரு பாடமாகவே இருக்கிறது. 11.11.2024

All reacti

துளி. 397

பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்கிக்கொண்ட சிறு பறவை நான். 17.10.2024.

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...