2.27.2019

துளி . 227

அன்பே 
நீ 
என் 
பலவீனமல்ல
பலம்....

                          26.02.2019.

துளி . 226

அலைகழிக்கப்பட்ட
பேரன்பு
விழிகள் வழியே
வீழ்ந்து மடிகிறது
கரிப்பு மணிகளாய்...

                                15.02.2019.

துளி . 225

காதல் காதல் காதல்
காதல் போயினும்
காதல் காதல் காதல்...

                                        13.02.2019.

துளி . 224

மானுடத்தின் மீது
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
                                    - சாருமதி.


                                               03.02.2019.

துளி . 223

வேறொன்றும் வேண்டாம்
பிரியம் கசியும்
பார்வை ஒன்றே
போதுமடா
ஊடலை கூடலாக்க....
                                 - சாருமதி.

                                                       31.01.2019

1.31.2019

துளி . 222

குளிர் சாரல் வீசுகிறது
என்றாள் சாருமதி
என் தோள்மீது
சாய்ந்துகொள் என்றேன்
சட்டென திரும்பி
முறைத்து பார்க்கிறாள்
கோபத்தோடு
உறவு முறிந்து
விடுமோ
என்று முழிக்கிறேன்
விழிகளை சிமிட்டி
புன்முறுவலுடன்
விலகி செல்கிறாள்
பின்தொடர்வதா
இல்லை விலகி
செல்வதா குழம்பி
நிற்கிறேன் நான்...

                              31.01.2019

துளி . 221

முற்றுகையிடப்பட்டுள்ளேன்
தேவதையின்
பேரன்பால்...

                                             29.01.2019

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...