12.31.2019

பதிவு . 27

சாலையில் ஒரு சாகசப் பயணம் - சுரேந்திரன்.
அஜந்தா எலோரா வரலாற்று சுற்றுப் பயணம் பல நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து இனி வரும் காலங்களில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.
பயண 
அனுபவங்களையும் உடன் பயணித்தவர்களை பற்றிய குறிப்புகளையும் சிறு சிறு பதிவுகளா எழுத நினைத்தேன். இன்னும் எழுதவில்லை. ஆனால் விரைவில் எழுத விரும்புகிறேன். பயணக்குழுவில் அறிமுகமான Siva Perumalசாரின் உதவியால் ஒரு பெரும் பயண அனுபவத்தை சொல்லும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிய சிறு குறிப்பு மட்டுமே இப்போது எழுதுகிறேன்.
அந்த புத்தகம் "சாலையில் ஒரு சாகசப் பயணம் - சுரேந்திரன் ". இந்த நூலை சுமார் இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடித்தேன். இது முழுமையான பயண அனுபவங்களை சொல்லும் நூல் அல்ல. ஆனாலும் அது பயண அனுபவங்களை அழகான புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ள ஆவண நூலாகும்.
ஐந்து நபர்கள் ஒரே குழுவாக
14.09.2018 முதல் 24.10.2018 வரையிலான காலத்தில் அருணாச்சலப்பிரதேசம்,மேகாலயா, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்களில் பயணித்துள்ளனர். இந்தியாவின் முதலில் சூரியன் உதயமாகும் பகுதியை கண்டு களித்துள்ளார்கள்.
புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் இயற்கையின் அழகை சொல்லும் புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான பயணகுறிப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற பயண நூலை இப்போதுதான் வாசிக்கிறேன். இந்த அனுபவமே சிறப்பாக இருக்கிறது.
புத்தகத்தினை சிறப்பாக வடிவமைத்து நமது நம்பிக்கை வெளியீடு என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு இந்த ஆண்டுதான் (2019) வெளியாகியுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                           13.12.2019.                                                                                                                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரைப்படங்கள் 2022.

  2022 - நான் பார்த்த படங்கள்.   01.      சனவரி : Intolerable Cruelty – Joel coen. 02.      The worst person in the world – Joachim T...