2.29.2024

துளி. 389

தீராத் துயரம்.
உதிப்பதும் உதிர்வதும்
உயிர்களுக்கு மட்டுமல்ல
உறவுகளுக்கும் உண்டு.
நம்பிக்கை வைக்கையில்
ஓர் உறவு தோன்றுகிறது
நம்பிக்கை இழக்கையில்
ஓர் உறவு உதிகிறது.
நம்புவதும் நம்பாமல் போவதும்
அவரவர்
உள்ளுணர்வு சார்ந்தது
உள்ளுணர்வை மறுபதற்கில்லை
ஏனெனில்
அதுவே அவரவர்
பாதுகாப்பு அரண்
அரணை மீறினால்
மரணம் உறுதி.
எதன் பெயரால் நிகழ்ந்தாலும்
பிரிவு துயரத்தையே பரிசளிக்கும்.  - 18.02.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...