3.02.2017

துளி .39

நீயும் நானும்
ஒரே பருவம்
நீயும் நானும்
வாழ்வது 
ஒரே நகரம்
நாம் சந்திக்கும்போது
சங்கமிக்க முடியாத
சங்கடங்கள்
சங்கடம் நீங்குமா
சங்கமம் நிகழுமா
யாரறிவார்
காலத்தின் கணக்கை .....

                                          28.02.2017

துளி .38

உறக்கம் தொலைத்த
இரவு ஒன்றில் வந்தது
உன் நினைவு...
.
எவ்வளவு தடைகள் வந்தாலும் 
காலம்தோறும் ஒன்றாகவே
பயணிப்போம் என்றாய் ....
தடம் மாறி பயணிக்கும்
இத்தருணத்திலும்
 இனிமையாகவே இருக்கிறது
உன் நினைவுகள் ....
உறக்கம் தொலைய காரணம்
உன் நினைவுகளாகவும் இருக்கலாம் ...

                                                               27.02.2017

துளி .37

எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....

                                 25.02.2017

துளி .36

ஊடலுக்கு பிறகான 
சமாதானத்துக்கு
ஈடான
இன்பம் வேறுயில்லை
இவ்வுலகில் ...

                                    24.02.2017.

துளி .35

இரவும் பகலும்
சங்கமிக்கும் தருணம்
வாகனம் குறைவான தெரு
நடந்தது வருகிறோம் எதிரெதிரே
கடந்து செல்கிறோம்
பார்க்காதது போல்
ஒருவரை ஒருவர்
பார்த்தபடியே ...

                                          24.02.2017

துளி .34

பள்ளி படிப்பை
பாதியில் நிறுத்திய
தோழியின் மகள் திருமணத்தில்
தேடி அலைகிறான் அவன்
தனக்கொரு மணப்பெண் தேடி ....

                                                 21.02.2017.

துளி .33

நடக்கும் நாடகத்தில்
எனக்கான வசனத்தையும்
அவர்களே பேசிவிட்டால்
நான் என்ன செய்ய....

                                        18.02.2017.

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...