5.09.2017

துளி.77

நீண்ட பகல்
நீண்ட மெளனம்

நீண்ட இரவு
நீண்ட தனிமை

பகலோ இரவோ
நீளமாகி போகிறது

அருகில் நீயில்லா
பொழுதுகளில்

                                      09.05.2017

5.08.2017

துளி.76

முன்பொரு காலத்தில்
பேசுவதற்காகவே
சந்தித்தோம்
பின்னொரு காலத்தில் 
பார்த்தும் பார்க்காது
விலகி சென்றோம்
உனது விருப்பம் மெளனம்
எனது விருப்பம் சொற்கள்
ஒன்றின் மறைவில்தானே இன்னோன்று .....

                                                        08.05.2017.

துளி.75

படப்படக்கும் 
உன் விழிகள்
தடத்தடக்கும்
என் இதயம்...

                              06.05.2017.

துளி.74

உன் கண்களில்
வழிகிறது கோடையை
குளுமை யாக்கும் 
பேரழகின் பேரன்பு...

                                    05.05.2017

5.03.2017

துளி .73

உலகில் 
உன்னதமானது 
உழைப்பு.....

                              01.05.2017.

துளி .72

உலகில் மகத்தான
பொய்கள் இரண்டு
ஒன்று கடவுள்
மற்றொன்று காதல் ...

                                       28.04.2017

Show More R

4.28.2017

துளி .71

மெளனத்தில்
மூழ்கடிக்கிறோம்
முரண்பாடுகளை
எவ்வளவு ஆழத்தில் 
மூழ்க வைத்தாலும்
வெளிவந்து விடுகிறது
பயணிக்க விரும்புகிறோம்
வேறுவேறு திசைகளில்
விலகல் விதிப்படி.....

                                27.04.2017

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...