காலப்பயண அரசியல் – கெளதம சித்தார்த்தன்.
கடந்த காலத்துக்குள் செல்ல எல்லோருக்கும் ஆசைத்தான். ஒருகாலத்தில் எனக்குள்ளும் அந்த ஆசை இருந்தது. அதற்கு காரணமாக காந்தி இருந்தார்.
காந்திய சிந்தனையின் பாதிப்பு எனக்குள் ஏற்பட்ட நாட்களில் நாட்களில் மாதம் ஒருமுறை அறைநாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். பசியை உணர்வதற்காவும் சீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கவும் அது உதவும் என்று காரணங்களை கற்பித்துக் கொண்டேன். அப்பொழுதெல்லாம் காந்தி வாழ்ந்த காலத்தில் வாழாமல் போய்விட்டமே என்று வருந்தி இருக்கிறேன். பிற்காலத்தில் அண்ணா காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என யோசித்து இருக்கிறேன்.
கால இயந்திரத்தில் கடந்து காலத்துக்கு செல்லும் பயணம் குறித்து கேள்விப்பட்டபோது அப்படி உண்மையிலேயே ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஆசைப்பட்டு இருக்கிறேன்.
கால இயந்திரத்தில் பயணம் செய்தவர்களை கதாபாத்திரங்களாக கொண்டு இரண்டு சிறுகதைகளை (இடியின் முழக்கம் – ரே பிராட்பரி & முகமதுவைக் கொன்றார்கள் – ஆள்ஃபிரெட்) இன்று படித்தேன்.
கெளதம சித்தார்த்தன் இந்த இரண்டு சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலம் பற்றிய தன்னுடைய சிந்தனைகளை “காலப்பயண அரசியல்” எனும் படைப்பாக மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய கெளதம சித்தார்த்தன் மற்றும் கால.சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக