நாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம்,
நடலை இல்லோம்,
இன்பமே எந்நாளும்,
துன்பமில்லை.
- திருநாவுக்கரசர்.
நாம் எவருக்கும் அடிமையில்லை,
மரணத்தை கண்டு எமக்கு அச்சமில்லை,
எமக்கு நோயும் இல்லை, ஆக மொத்தத்தில் எனக்கு இன்பம் மட்டுமே உண்டு, துன்பம் இல்லை.
- விளக்க உரை ம.செந்தமிழன்.
ம.செந்தமிழனின் "நமனை அஞ்சோம்" சிறிய புத்தகம்தான் என்றாலும் அது சொல்லும் சேதி மிகப்பெரியது. உடலுக்கும் மனதுக்கும் இருக்கும் உறவு, உடலுக்கும் இயற்கைக்கும் இருக்கும் ஒற்றுமைகள், மனதால் உடலை செம்மை படுத்தும் விதம், நவீன மருத்துவம் செயல்படும் விதம், அதன் போதாமைகள். என அனைத்து விசயங்களையும் இந்த சிறு நூல் பேசுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக